Advertisment
/idhalgal/cinikkuttu/totaroviyam

ணையம் வந்ததிலிருந்து ஊடகங்கள் மக்களுக்கு நெருக்கமாக, ஏன் கிட்டத்தட்ட மக்களின் கைகளுக்கே வந்துவிட்டன. தனி நபரின் திறமையை வெளிப்படுத்த பல புதிய தளங்கள் வந்துவிட்டன. எங்கோ கேரளாவின் மூலையில் ஒரு எளிய தொழிலாளி பாடும் "விஸ்வரூபம்' பாடல் கமல்ஹாசன் வரை சென்று, அவரை அழைத்து கௌரவப் படுத்துகிறார். திருப்பூ

ணையம் வந்ததிலிருந்து ஊடகங்கள் மக்களுக்கு நெருக்கமாக, ஏன் கிட்டத்தட்ட மக்களின் கைகளுக்கே வந்துவிட்டன. தனி நபரின் திறமையை வெளிப்படுத்த பல புதிய தளங்கள் வந்துவிட்டன. எங்கோ கேரளாவின் மூலையில் ஒரு எளிய தொழிலாளி பாடும் "விஸ்வரூபம்' பாடல் கமல்ஹாசன் வரை சென்று, அவரை அழைத்து கௌரவப் படுத்துகிறார். திருப்பூரின் ஒரு எளிய வீட்டின் குழந்தை சொல்லும் 'தப்பு பண்ணுனா அடிக்காம, திட்டாம, குணமா சொல்லணும் "தமிழகம் முழுவதும் வைரல் ஆகிறது. இப்படி மக்கள் சினிமா என்னும் மாபெரும் திரையைத் தாண்டி பல புதிய திரைகளையும் பார்க்கத் தொடங்கிவிட்டனர்.

Advertisment

thodaroviyam

சமீபத்தில் வெளியான ஒரு குறும்படம் (குறும் குறும்பட மென்றே சொல்லலாம்) இணையத்தை வலம்வருகிறது. ஒரு இளைஞனின் தனிமையை எந்த கூடுதல் சொல்லும் இல்லாமல் படமாக்கியிருக்கும் அந்தக் குறும்படத்தின் ஹைலைட் thodaroviyamஅதன் அழகிய ஃப்ரேம்கள்தான். ஒவ்வொரு காட்சியையும் பிரிண்ட் செய்து ஃப்ரேம் போட்டு மாட்டலாம், அத்தனை அழகு. அறையில் தனியே வாழும் அவனது மாலை அவனை மட்டும் பார்த்துக் கொண்டிருக்கும் தொலைக்காட்சியிலிருந்து தொடங்குகிறது. அந்தத் தனிமை மெல்ல விரிந்து ஒரு தெரு, ஒரு நிலப்பரப்பு, பின் இந்த உலகம் என பெரிய உலகில் ஒரு மனிதன் எவ்வளவு சிறியவன் என்பதை விவரிப்பதுபோல இருக்கிறது அந்தக் குறும்படம். ஒரு தொடரோவியமாய் நீள்கிறது "ஐசோலேஷன்' (isolation) குறும்படம். பின்னணியில் "எ சூஃபி அண்ட் எ கில்லர்' (a sufi and a killer) என்ற ஆல்பத்திலிருந்து ஒரு பாடல் ஒலிக்கிறது. இளையராஜாவின் 70-கள் இசையின் சாயல், அதில் ஆங்கில குரல் கலந்து ஒரு சரியான காக்டெயிலாக போதை ஏற்றுகிறது அந்தக் குறும்படம்.

Advertisment

இதைப் படமாக்கிய ஆகாஷ் பிரகாஷ் சித்தார்த் நடித்த "அவள்' படத்தில் உதவி ஒளிப்பதிவாளராம்.

cine201118
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe