Advertisment

டல்லடித்த டாப்ஸி!

/idhalgal/cinikkuttu/topsy

பெரிய பேனர், நல்ல அறிமுகமுள்ள முகங்கள், விளம்பர உத்திகள் அது இதுவென என்னென்னவோ செய்து பார்த்தாலும் சில படங்கள் நினைத்த வெற்றியைத் தருவதில்லை. அதில் நல்ல கருத்துள்ள படங்கள் சிலவும் சிக்கிக்கொண்டு அல்லாடுவது சினிமாவின் தலையெழுத்து.

Advertisment

tt

அந்தவகை

பெரிய பேனர், நல்ல அறிமுகமுள்ள முகங்கள், விளம்பர உத்திகள் அது இதுவென என்னென்னவோ செய்து பார்த்தாலும் சில படங்கள் நினைத்த வெற்றியைத் தருவதில்லை. அதில் நல்ல கருத்துள்ள படங்கள் சிலவும் சிக்கிக்கொண்டு அல்லாடுவது சினிமாவின் தலையெழுத்து.

Advertisment

tt

அந்தவகையில், டாப்ஸி நடித்த "சாண்ட் கி ஆன்க்' என்ற பாலிவுட் படம் போதுமான வரவேற்பைப் பெறாமல் ஈயாடுகிறது. வயதுமுதிர்ந்த தோட்டத் தொழிலாளியாக இந்தப் படத்திற் காக தன்னை மாற்றிக்கொண்டு, ரொம்பவே மெனக் கெட்டிருக்கிறார் டாப்ஸி. சொல்லப் போனால், "கதையும், பட உருவாக்கமும் வேறலெவல்' என விமர்சகர்கள் மத்தியில் கொண்டாடப் பட்டாலும், தீபாவளி ரிலீஸுக்கேற்ற கூட்டமே இல்லாமல் தனியாக ஓடிக் கொண்டிருந்தது.

தேசியளவில் கவனம்பெறக்கூடிய கதைக்களம் இருந்தும், அப்படி யொரு நம்பிக்கை வைத்திருந்தும், இந்தப் படத்தின் முதல்நாள் வசூலில் ஒரு கோடியைக்கூடத் தாண்டமுடியாமல் போனதுதான் சோகத்திலும் சோகம். தன்னுடைய படங்கள் வணிகரீதியில் வெற்றியடைய வேண்டும் என்று விரும்பும் எந்தவொரு நடிகையையும் இதுபோன்ற செய்திகள் கலக்க மடையச் செய்யும் என்கிறபோது, டாப்ஸி மட்டும் விதிவிலக்கா என்ன?

இதை எண்ணி மனதில் புழுங்கிய டாப்ஸிக்குக் கிடைத்த ஒரே ஆறுதல், முதல் நாள் ரிலீஸை விடவும் அடுத்த சில நாட்களில் ஐந்து மடங்கு கூடுதல் வசூலைத் தந்ததுதான். இதுகூட சொல்லிக்கொள்ளும் அளவுக்கான வெற்றி கிடையாது என அனலிஸ் டுகள் கருத்துக்கூறி, டாப்ஸியின் இதயத்தில் வேல் பாய்ச்சுகிறார் களாம்.

cini191119
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe