"இஞ்சி இடுப்பழகி' படத்திற்காக நடிகை அனுஷ்கா தாறுமாறாக எடையைக் கூட்டி, அதைக் குறைக்க முடியாமல் ரொம்பவே சிரமப் பட்டார். "பாகுபலி-2'-ல் அவரை ஒல்லியாகக் காட்டவே சில கோடிகளைக் கொட்டி இருந்தனர். அதன்பிறகு வெளியில் முகம்காட்டாத அனுஷ்கா, திடீரென எடையைக் குறைத்து பழைய பொலிவுடன்கூடிய புகைப்படத்தைப் பதிவிட்டார். இந்த சீக்ரெட் என்னவென்று எல்லாரும் கேட்டுக்கொண்டே இருந்தநிலையில், தான் எடையைக் குறைக்கபட்ட கஷ்டங்கள், 62 வழிகளைப் பின்பற்றி எடையைக் குறைத்தது பற்றி புத்தகம் வெளியிடப் போகிறாராம்..

ஷில்பா, பிபாஷா வரிசையில் அனுஷ்கா! .

mm

.

Advertisment

மாடலிங், திரைத்துறை போன்றவற்றில் இருக்கும் சிலர் போடோக்ஸ் சிகிச்சை மேற்கொள்வது வழக்கம். அதீத வியர்வை, ஒற்றைத் தலைவலி போன்ற காரணங்களுக்காக இந்த சிகிச்சை எடுத்துக் கொள்கிறார்கள். சமீபத்தில் விழா ஒன்றில் கலந்துகொண்ட கீரா அத்வானி, இந்த சிகிச்சை மேற்கொண்டிருக்கிறார் என பலரும் கிண்டலடிக்க, கடுப்பான கீரா ""அன்னைக்கு மேக்-அப் கொஞ்சம் கூடிப்போச்சி. அதனால, பொம்மைக்குட்டி மாதிரி மூஞ்சி இருந்துச்சி. இதுக்காகவெல்லாம் ஆபரேஷன் பண்ணிக் கிட்டேன்னு சொல்றது த்ரீ மச்!'' என்று ரசிகர்களுக்கு செல்ல ரிப்ளை கொடுத்திருக்கிறார்..

மேக்- அப்புல மூஞ்சிய அப்புனா அப்டிதான் இருக்கும்! .

mm

Advertisment

தெலுங்கு சினிமா என்றாலே நடிகைகளின் கவர்ச்சிக்கு பஞ்சமிருக்காது. அப்படி இருந்தும் தனது நடிப்புத் திறமையால் ஓரளவுக்கு ரசிகர்களின் ஹார்ட்டில் ஓரமாக இடம்பிடித்திருந்த ஹெபா படேலை, சில மாதங்களாக சீனிலேயே காணவில்லை. திடீரென்று "குமாரி 21-எஃப்' படத்தில் மீண்டும் தன் நடிப்புத் திறமையை வெளிப்படுத்தினார். இருந்தும் பட வாய்ப்புகள் பெரிதாக இல்லை. இதனால், ரசிகர் களின் ஹார்ட்டில் ஓரமாக இருந்த ஹெபா, முழுதாக பாய்விரித்துப் படுக்க முடிவு செய்தாரோ என்னவோ தனது ஹாட் அத்தியாயத்தைத் தொடங்கிவிட்டார். ஹெபாவின் இந்த லுக், வேற லெவல் என்கின்றனர் அவரது ரசிகர்கள்!

சம்மருக்கே சூடேற்றும் ஹெபா!

mmm

கியூட் - ஹாட் காம்போ கொண்ட நடிகைகள் வெகுசிலரே. அந்தக் குறைந்த எண்ணிக்கையில் நிறைந்த இடத்தைப் பிடிப்பவர் மாள்விகா சர்மா. சமீபத்தில் டீப்-நெக் கறுப்பு ஜாக்கெட் அணிந்து, இதயம் தெரியுமளவுக்கு கிளுகிளுப்பான போஸ் கொடுத்த போட்டோவைப் பதிவேற்றி இருந்தார். அதில், ""கொழுகொழுன்னு இருந்தா எடையைக் குறைக்க சொல்றது. எலும்பா- ஒல்லியா இருந்தா வெயிட் போடுன்னு சொல்றது. கொஞ்சம் வேலையைப் பாக்குறீங்களா. உங்களாலதான் பாய்ஸ்... ரொம்ப நாளா நான் போட்டோக்களை பதிவிடுறதே இல்ல. ஏதாச்சும் சொல்லிட்டே இருக்கீங்க. எனக்கு என் கட்டுடல் மேனியை ரொம்பவே பிடிச்சிருக்கு. பிடிக்காம குறை சொல்றவங்க ஓரமாப் போங்கப்பு...'' என பதிவிட்டிருக்கிறார்.

பாத்தா பாருங்க பாக்காட்டி போங்க!

mm

ந்தியாவின் முக்கிய மொழிகள் அனைத்திலும் ரிலீசாகி சக்கைப்போடு போட்டது யாஷ் நடித்த "கே.ஜி.எஃப்.' இந்தப் படத்தில் நாயகி ரீனா கதாபாத்திரத்தில் நடித்த அறிமுக நடிகை ஸ்ரீநிதி ஷெட்டிக்கு சொல்லிக் கொள்ளும் அளவுக்கு காட்சிகள் இல்லை. ஆனாலும், "கே.ஜி.எஃப். சேப்டர்-2-'க்காக ரொம்பவே எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார் ஸ்ரீநிதி. இதற்காக 7 படங்களை ரிஜெக்டும் செய்துவிட்டாராம். "கே.ஜி.எஃப். சேப்டர்-2'-ல் ரீனாவின் கதாபாத்திரம் முழுமையடையும். அதனால், வேறெந்த படத்திலும் கமிட் ஆகவில்லை. "கே.ஜி.எஃப்-2' சூட்டிங் போய்க்கொண்டிருக்கிறது. ""இந்த சேப்டரில் எனது கதாபாத்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருக் கிறார்கள்'' என்கிறார் ஸ்ரீநிதி.

இதெல்லாம் ரொம்ம்ம்ப ஓவரு!

ன்னட திரையுலகைச் சேர்ந்தவர் நடிகை ஹர்ஷிகா பூச்சனா. இவர் சில தினங் களுக்குமுன்னர் மடிகேரி பகுதியில் இருக்கும் ஒரு கிராமத்தில் நடைபெற்ற, தனது உறவினர் வீட்டு விழாவில் கலந்துகொண்டார். அப்போது அவர் தங்கியிருந்த ரிசார்ட்டில் பிபின், நன்னையா ஆகிய இரு இளைஞர்களும் இருந்திருக்கின்றனர். இருவரும் ஹர்ஷிகாவிடம் தனியாக சென்று பேச்சுக் கொடுத்திருக்கின்றனர். பேச்சு வாக்குவாதமாகி, வாக்குவாதம் தகாத செயல்களுக்குத் தூண்ட, ஹர்ஷிகாவை பலாத்காரமாக சீண்டியிருக்கின்றனர் இருவரும். இதில் மிரண்டுபோன ஹர்ஷிகா அலறியடித்துப்போய் புகார் கொடுக்க, போலிஸ் அந்த இளைஞர்களைத் தூக்கிச்சென்று லாடம் அடித்திருக்கிறது.

கைய வச்சுக்கிட்டு சும்மா இருக்கக்கூடாதாப்பா?

"காதல் சொல்ல வந்தேன்' திரைப்படத்தின்மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் மேக்னா ராஜ். படவாய்ப்புகள் குறைந்ததால் சாண்டல்வுட் பக்கம் சென்றவர், அங்கேயே திருமணத்தை முடித்து செட்டிலும் ஆகியிருக்கிறார்.

தற்போது, நடிகை என்ற லெவலில் இருந்து ப்ரமோஷ னாகி, தயாரிப்பாளர் என்ற புதிய அவதாரத்தை எடுத்திருக்கிறார். பவன் என்கிற அறிமுக இயக்குநர் எழுதி இயக்கும், "புட்டானி புண்டர்ஸ்' என்ற படத்தை மேக்னா ராஜ் தயாரிக்கிறார். ""கதையைக் கேட்டதும் ரொம்பவே பிடித்துப் போய்விட்டது. தயாரிப்பாளராக புதிய அனுபவத்தை நோக்கி நகர்கிறேன்'' என்கிறார் மேக்னா.

வாழ்த்த வயதில்லை மேக்னா!

டிகை நித்யா மேனன் பட வாய்ப்புகள் குறித்துப் பேசவந்தால் கண்டுகொள்ள மறுக்கிறார். "அவருக்கு திமிர் கூடிப்போச்சு. அதனால், அவரை கன்னட திரைத்துறையில் இருந்து தடைசெய்யப் போகிறோம்' என்று அறிவித்தது கன்னட தயாரிப்பாளார் சங்கம். இதற்கு பதிலளித்திருக்கும் நித்யா, ""என் அம்மா கேன்சரால் பாதிக்கப்பட்டு அபாயகரமான கட்டத்தில் சிகிச்சை பெற்றுவருகிறார். இந்த வலியோடுதான் கமிட்டான படத்தில் வேறுவழியில்லாமல் நடித்து வருகிறேன். ஓய்வுநேரங்களில் கேரவனில் கதறியழும் என் நிலைமை யாருக்குத்தான் புரியும்?'' என கண்ணீர் விட்டிருக்கிறார் நித்யா.

புரிஞ்சிக்கோங்கப்பா ப்ளீஸ்!

"பேட்ட' படத்தின்மூலம் தமிழில் அறிமுகமானவர் மாளவிகா மோகனன். சமீபத்தில் செம கிளு கிளுப்பான புகைப்படங்களை வரிசையாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார். அதைப் பார்த்த சில ரசிகர்கள், "ஒழுக்கமான பொண்ணா ட்ரெஸ் போடப் பழகுங்க' என பாடமெடுத்திருக்கின்றனர். அதற்கு பதிலளிக்கும் விதமாக அதே உடையில் வேறொரு போஸில் இன்னொரு படத்தைப் பதிவிட்டிருக்கும் மாளவிகா, ""ஒழுக்கமான பொண்ணு எப்படி ட்ரெஸ் போடணும்னு பாடமெடுத்த நல்லவிங்களா... இதோ எனக் குப் பிடிச்ச ட்ரெஸ்ஸைப் போட்டு ஒழுக்கமா உக்காந்திருக்கேன். வந்து பாத்துக்கோங்க'' என எழுதி அவர்களை வெறுப்பேற்றி இருக்கிறார்.

சம்மர் வெக்கை இவிங்களுக்குத் தெரியவா போகுது?

"ஒரு அடார் லவ்' படத்தில் நடித்த ப்ரியா பிரகாஷ் வாரியரும், ரோஷன் அப்துல் ரஹூஃபும் டேட்டிங் செல்வதாக வதந்திகள் பரவின. ஏற்கெனவே படம் பயங்கர ஃப்ளாப் ஆன கடுப்பில் இருந்த ப்ரியா, இதை மறுத்தோ ஆமோதித்தோ பதில் தெரிவிக்கவில்லை. ஒரு பேட்டியில் மீண்டும் இதுபற்றி கேட்கப்பட்டபோது, ""ஒத்த வயதுள்ள ஒருவருடன் சேர்ந்து முதல் படத்தில் நடித்தபோது பல விஷயங்களைக் கற்றுக்கொள்ள முடிந்தது. நட்பாகப் பழகினோம்.

அதற்காக இல்லாததை எல்லாம் சொன்னால் எப்படி? வதந்திகள் வதந்திகளாகவே போய்விடும். அதைப் பற்றிப் பேசத் தேவையில்லை'' எனக் கூறியிருக்கிறார் ப்ரியா.

ஆமா.. பழகுனீங்கதானே?

லையாளத்தில் "ஜோசப்' என்ற படத்தின்மூலம் அறிமுகமானவர் மாதுரி. அதில் நல்ல வரவேற்பு கிடைத்தது. சமீபத்தில் சம்மர் வெக்கேஸனுக்காக தாய்லாந்து போனவர், அங்கு சில படங்களை இன்ஸ்டாகிராமில் தட்டிவிட்டார். அதில் நீலநிற பிகினி படம் படுபயங்கர கவர்ச்சியுடன் இருக்க, மாதுரியைப் பின்தொடர்பவர்களின் என்ணிக்கை பல மடங்காக உயர்ந்தது.

mm

அதேசமயம், பலர் மாதுரியை வறுத்தெடுக்க, ""ஹாலிடேயில், நீச்சல் உடையில் இருக்கும் என் படம் வானத்தை முட்டும் அளவுக்கு பேமஸ் ஆகிவிட்டது; மலையாளிகளுக்கு அதனால் எந்தக் குறையும் ஏற்பட்டு விடாது'' என பதிலளித்துவிட்டார்.

பளார் ரிப்ளை மாதுரி!

மதி