கே.டி. குஞ்சுமோன் தயாரிப்பில் உருவான "காதலுக்கு மரணமில்லை' படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான தேஜ், தொடர்ந்து "கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை', "காந்தம்' ஆகிய படங்களில் நடித்திருக் கிறார். தற்போது இவரது நடிப்பில் "மொழிவது யாதெனில்', "விண்ணைத் தொடு' ஆகிய படங்கள் ரிலீஸுக்கு தயாராக உள்ளன.

Advertisment

தற்போது, நடிப்புடன் இயக் கத்திலும் கவனம் செலுத்தும் தேஜ், குடும்ப த்ரில்லர் ஜானரில் ஒரு படத்தை இயக்கி ஹீரோ வாக நடிக்கிறார். "ரீவைண்ட்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படம் தமிழ் மற்றும் கன்னடம் என இரு மொழிகளில் உருவாகிறது. தேஜு-க்கு ஜோடியாக சந்தனா ராகவேந்திரா நடிக்கிறார்.

re

மே 6-ஆம் தேதி எளிமையான முறையில் படப்பிடிப்பைத் தொடங்கிய "ரீவைண்ட்' குழுவினர், மே 27-ஆம் தேதிமுதல் ஜெர் மனியில் தொடர்ந்து படப்பிடிப்பை நடத்தத் திட்டமிட்டிருக்கிறார்கள்.

Advertisment

படம் குறித்து இயக்குநரும், ஹீரோவுமான தேஜ், ""தமிழ் சினிமா தற்போது ஹாலிவுட் சினிமாவுக்கு நிகராக வளர்ந்திருக்கிறது. பல இளைஞர்கள் வித்தியாசமான கதைக் களத்தோடு வெற்றிபெறுகிறார்கள். அந்த வரிசையில் நானும் "ரீவைண்ட்' மூலம் வெற்றி பெறுவேன்.

படத்தில் எனக்கு பத்திரிகை நிருபர் வேடம். அவர் கண்டுபிடிக்கும் சில கார்ப்பரேட் க்ரைம் மூலம் அவரது குடும் பத்திற்கு பிரச்சினைகள் வர, அதிலிருந்து அவர் களைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபடு கிறார். அதன் பின்னணியில் நடக் கும் சஸ்பென்ஸும், த்ரில்லரும் நிச்சயம் ரசிகர்களைக் கவரும்'' என்றார்.