""நான் திரு. கணேசன் அவர்கள் இயக்கிய "18-5-2009' என்ற தமிழ்ப் படத்தில் கதாநாயகியாக நடித்தேன். அதுமட்டுமின்றி பல விளம்பரப்படங்களிலும் நடித்துள்ளேன். இந்நிலையில் கடந்த 14-5-2018 அன்று நள்ளிரவு 1.15 மணிக்கு ''சர் ஈஹப்ப்ங்ழ் ஒக்'' என்ற எண்ணிலிருந்து என் செல்போனிற்கு ஒரு அழைப்பு வந்தது. நான் வேறு ஒரு இணைப்பில் பேசிக்கொண்டிருந்தால் மேற்படி அழைப்பை என்னால் எடுத்துப் பேசமுடியவில்லை. உடனே விடியற்காலை 1.16 மணிக்கு மீண்டும் மேற்படி அதே ''No Caller Id''என்ற எண்ணிலிருந்து அழைப்பு வந்தது. அதில் பேசியவர் ஒரு ஆண்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/thanya.jpg)
""நீதானடி 18-5-2009 என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தாய், உனக்கு வெட்கமா இல்லையாடி, நிர்வாணமாய் நடித்துள்ளாய்'' என்று கூறி மிகவும் கேவலமான வார்த்தைகளால் என்னை திட்டினார். இதனால் நான் மிகவும் பயத்துடனும், பதட்டத்துடனும் அந்த நபரிடம் "நான் ஒரு நடிகை. எதுவாக இருந்தாலும் இயக்குநரையோ அல்லது தயாரிப்பாளரையோ அணுகி பேசிக்கொள்ளுங்கள்' என்று கூறினேன். அதற்கு அந்த நபர், ""நீ தனியாகத்தானே இருக்க. எப்படி வெளிய வரனு பார்க்கறேன். நான் யாருன்னு உனக்கு தெரியாது உன்ன என்ன வேணாலும் என்னால பண்ணமுடியும். 18-5-2009 படம் ரிலீஸ் ஆச்சினா உன்ன எப்படியும் நாங்க போட்டு தள்ளிடுவோம்.'' என்றரர்.
நான் எவ்வளவோ கூறியும் என்னை மிகவும் மோசமாக திட்டியும், கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டிவிட்டுப் போனை கட் செய்துவிட்டார். மேற்படி செல்போன் அழைப்பால் மிகவும் பயந்திருந்த சூழ்நிலையில் மீண்டும் 18-5-2018 அதிகாலை 5 மணிக்கு +44740417369 என்ற எண்ணில் இருந்து அழைப்பு வந்தது. இதனால் நானும் எனது தாயாரும் பாதுகாப்பாற்ற சூழ்நிலையில் எங்களை என்ன செய்வார்களோ என்ற பயத்தோடு வாழ்ந்து வருகிறோம்.
ஒரு நடிகை என்ற முறையில் நான் மேற்படி 18-5-2009 என்ற தமிழ்ப் படத்தில் நடித்துக் கொடுத்தேன். மற்றபடி எனக்கு எந்த விபரமும் தெரியாது.'' என கதறியபடி சென்னை போலீஸ் கமிஷனருக்கு புகார்க் கடிதம் எழுதியுள்ளார். தான்யா (எ) ரபியா பானு.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2018-05/thanya-t.jpg)