dபி.ஜி. பிக்சர்ஸ் சார்பில் ரொமிலா நல்லையா, ஸ்ரீ அஸ்வினி மற்றும் மஜீத் ஆகியோர் தயாரிக்கும் படம் "புயலில் ஒரு தோணி.' புதுமுகங்கள் ஸ்ரீசேது, ரேவதி தரண், விவேக் & ரித்திகா ஆகியோர் நடிக்கும் இந்தப் படத்தை ஜலீல் இயக்குகிறார்.

Advertisment

இசைஞானி இளைய ராஜாவின் மகள் பவதாரிணி இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார்.

ஜேசன் வில்லியம்ஸ் வரதராஜன் ஒளிப்பதிவு செய்ய, எம்.ஜி. கன்னியப்பன் படத்தொகுப்பை கவனிக்கிறார்.

Advertisment

இந்தப் படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் சிறப்பு அழைப்பாளராக தயாரிப்பாளர் சங்கத் (கில்டு) தலைவர் ஜாக்குவார் தங்கம் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

""பெண்களுக்கு ஆதரவான ஒரு குரலாக இந்தப்படம் உருவாகிறது'' என்கிறார் படத்தின் இயக்குநர் ஜலீல்.

Advertisment