Advertisment

யோசித்த தேவயானி!

/idhalgal/cinikkuttu/think-devayani

dinesh"நம்ம ஊரு பூவாத்தா', "ராக்காயி கோயில்', "பெரிய கவுண்டர் பொண்ணு', "கட்டபொம்மன்', "நாடோடி மன்னன்', "மாப்பிள்ளை கவுண்டர்' உட்பட 16 சூப்பர் ஹிட் படங்களைத் தயாரித்த ராஜபுஷ்பா பிக்சர்ஸ் பட நிறுவனம் பதினேழு ஆண்டுகளுக்குப் பிறகு "களவாணி மாப்பிள்ளை' படத்தைத் தயாரிக்கிறது.

Advertisment

தினேஷ் நாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக அதிதி மேனன் நடிக்கிறார்.

படம் பற்றி இயக்குநர் காந்தி மணிவாசகம் என்ன சொல்றாருன்னா...

""என் அப்பா மணிவாசகம் ஒரு பார்முலா வைத்திருப் பார்..மெ

dinesh"நம்ம ஊரு பூவாத்தா', "ராக்காயி கோயில்', "பெரிய கவுண்டர் பொண்ணு', "கட்டபொம்மன்', "நாடோடி மன்னன்', "மாப்பிள்ளை கவுண்டர்' உட்பட 16 சூப்பர் ஹிட் படங்களைத் தயாரித்த ராஜபுஷ்பா பிக்சர்ஸ் பட நிறுவனம் பதினேழு ஆண்டுகளுக்குப் பிறகு "களவாணி மாப்பிள்ளை' படத்தைத் தயாரிக்கிறது.

Advertisment

தினேஷ் நாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக அதிதி மேனன் நடிக்கிறார்.

படம் பற்றி இயக்குநர் காந்தி மணிவாசகம் என்ன சொல்றாருன்னா...

""என் அப்பா மணிவாசகம் ஒரு பார்முலா வைத்திருப் பார்..மெலிதான ஒரு கதையில் நிறைய கமர்ஷியல், நிறைய காமெடி வைத்திருப் பார். அதைத்தான் நானும் தொட்டிருக்கிறேன். பக்கா பேமிலி சப்ஜெக்டுடன் காமெடியை மிக்ஸ் செய்திருக்கிறேன். வழக்கமாக மாமியார்- மருமகள் கதைகள்தான் சினிமாவில் வந்திருக்கின்றன; ஜெயித் திருக்கின்றன. மாமியார்- மருமகன் கதைகள் அத்தி பூத்தாற்போல் வரும்...

Advertisment

அமோக வெற்றிபெறும்.

அப்படித் தான் இது உருவாக்கப்பட்டிருக்கிறது.

devayani

தினேஷுக்கு மாமியாராக நடிக்க வேண்டும் என்று தேவயானியிடம் கேட்ட போது தயங்கினார். முழுக்கதையையும் கேட்ட உடன் ஓ.கே.சொன்னார்.

அந்தளவுக்கு மாமியார்- மருமகன் பிரச்சினையை இதில் கையாண்டிருக்கி றோம். ஜாலியான பொழுதுபோக்குப் படமாக "களவாணி மாப்பிள்ளை' உருவாகி இருக்கிறது. படம் இம்மாதம் வெளியாகிறது'' என்றார்.

-------------

மிழ்த் திரையுலகின் முன்னணி பைனான்சியரும், "அரண்மனை-1' மற்றும் 2, "மாயா', "பாகுபலி 1', "சென்னை 28', "இது நம்ம ஆளு', "காஞ்சனா', "சிவலிங்கா' (தெலுங்கு), "ஹலோ நான் பேய் பேசுறேன்' உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட வெற்றிப் படங்களை அபிஷேக் பிலிம்ஸ் சார்பாக விநியோகம் செய்தவருமான ரமேஷ் பி பிள்ளை தற்போது தனது அபிஷேக் பிலிம்ஸ் சார்பாக புதிய பிரம்மாண்டமான படங்களைத் தயாரிக்கவுள்ளார்.

முதல் படம்- "சொல்லாமலே', "பூ', "பிச்சைக்காரன்' ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் சசி இயக்கத்தில் மிகுந்த பொருட்செலவில் சித்தார்த் - ஜி.வி.பிரகாஷ்குமார் நடிப்பில் உருவாகிறது. இன்னும் பெயரிடப்படாத இப்படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகிறது. இப்படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில் முன்றாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது.

இரண்டாவதான "சதுரங்க வேட்டை' படத்தைத் தெலுங்கில் "ப்ளஃப் மாஸ்டர்' என்ற தலைப்பில் தயாரிக்கிறார். கதாநாயகனாக சத்யதேவ், கதாநாயகியாக நந்திதா நடிக்கிறனர்.

மூன்றாவது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் புதிய படம்.

நான்காவது படமாக- நடிகை டாப்ஸி நடிப்பில் தெலுங்கில் வெளியாகி பெரும் வெற்றிபெற்ற "ஆனந்தோ பிரமா' படத்தைத் தமிழில் தயாரிக்கிறார். இப்படத்தில் நாயகியாக நடிக்க முன்னணி கதாநாயகிகளுடன் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.

cine250918
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe