Advertisment

இம்சை இருக்கு, ஆனா இல்ல...''-சில ஹீரோயின்கள் ஸ்டேட்மென்ட்!

/idhalgal/cinikkuttu/there-nothing-else-some-heroines-statement

ப்போது மீ டூ விவகாரம் சந்தி சிரிப்பதற்கு முன்னாலேயே கேரளாவில் ஒரு அமைப்பையே தொடங்கினார்கள் சில ஹீரோயின்கள். மலையாள சினிமா நடிகர் சங்கமான "அம்மா'-வின் தலைவராக இருப்பவர் மோகன்லால். ஒரு நடிகையை பலாத்காரம் செய்த வழக்கில் சிக்கி கம்பி எண்ணி வெளியே வந்தவர் ஹீரோ திலீப். வழக்கில் சிக்கி ஜெயிலுக்குப்போனதும் உடனே "அம்மா'-விலிருந்து திலீப்பை நீக்கிய மோகன்லால், திலீப் ரிலீசானதும் மீண்டும் சங்கத்தில் சேர்க்கும் முடிவுக்

ப்போது மீ டூ விவகாரம் சந்தி சிரிப்பதற்கு முன்னாலேயே கேரளாவில் ஒரு அமைப்பையே தொடங்கினார்கள் சில ஹீரோயின்கள். மலையாள சினிமா நடிகர் சங்கமான "அம்மா'-வின் தலைவராக இருப்பவர் மோகன்லால். ஒரு நடிகையை பலாத்காரம் செய்த வழக்கில் சிக்கி கம்பி எண்ணி வெளியே வந்தவர் ஹீரோ திலீப். வழக்கில் சிக்கி ஜெயிலுக்குப்போனதும் உடனே "அம்மா'-விலிருந்து திலீப்பை நீக்கிய மோகன்லால், திலீப் ரிலீசானதும் மீண்டும் சங்கத்தில் சேர்க்கும் முடிவுக்கு வந்தார்.

Advertisment

இதற்கு பார்வதி மேனன், மஞ்சு வாரியார், நவ்யா நாயர், ரம்யா நம்பீசன், ரேவதி உள்ளிட்ட நடிகைகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

Advertisment

anupamaramya

இப்போதும் தெரிவித்துக்கொண்டே இருக்கின்றனர். இதனால் கடுப்பான மோகன்லால், மேற்படி நடிகைகளுக்கு, குறிப்பாக ரம்யா நம்பீசனுக்கு மலையாள சினிமாவில் சான்ஸ் கொடுக்கக்கூடாது என தயாரிப்பாளர்களை பகிரங்கமாகவே மிரட்ட ஆரம்பித்திருக்கிறார்.

இதை ஓப்பனாகவே சொல்லி கண்ணீர்விடுகிறார் ரம்யா நம்பீசன். அதனால்தான் தமிழ், தெலுங்கு சினிமாவில் சின்ன ஹீரோக்களுடனும் நடிக்கும் முடிவுக்கு வந்திருக்கிறார்.

actress

ரம்யா நம்பீசன் கதை இப்படி என்றால், அதே மலையாள சினிமாவிலிருந்து தமிழுக்கு இறக்குமதியாகியிருக்கும் அனுபமா பரமேஸ்வரன் கதையோ வேறுமாதிரி இருக்கிறது. வாரந்தோறும் டிசைன் டிசைனாகவும் ஜிலுஜிலுப்பாகவும் தனது ஸ்டில்களை mohanlal-delipரிலீஸ் பண்ணும் அனுபமா பரமேஸ்வரன், தமிழில் தனுஷுடன் "கொடி' படத்தில் அறிமுகமானார். அதன்பின் அவர் எதிர்பார்த்தது நடக்கவில்லையோ, இல்ல சிலரின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றமாதிரி அனுபமா நடந்து கொள்ளவில்லையோ, தமிழில் சுத்தமாக சான்ஸ் இல்லை.

இருக்கவே இருக்கு தெலுங்கு சினிமா என ஹைதரபாத்துக்கு ஜாகையை மாற்றினார். வரிசையாக சான்ஸ்களையும் கைப்பற்றினார்.

அதன்பின் கன்னடப் படவுலகிற்குள்ளும் நுழைந்தார். ""கன்னட ஹீரோ புனித ராஜ்குமார் என்னை நன்றாக கவனித்துக் கொண்டார் . கன்னட, தெலுங்கு டைரக்டர்கள் செம ஸ்வீட். என் கிட்ட ரொம்ப டீசண்டாக நடந்துகொள்கிறார்கள். வித்தியாசமான கேரக்டர்களைக் கைப்பற்ற பேராசையுடன் களத்தில் குதித்துள் ளேன். இப்ப எனக்கு ஹைதராபாத் தான் சொந்த ஊர் மாதிரி ஆகிப் போச்சு'' என தெலுங்கு சினிமா பத்தி ரொம்பவே மெய்சிலிர்த்துப் பேசுகிறார்.

அனுபமா பரமேஸ்வரனின் ஓப்பனிங்கெல்லாம் நல்லாத்தான் இருக்கு. ஆனா ஃபினிஷிங் சரியில்லாமப் போச்சுனா? அப்புறம் இருக்கவே இருக்கு மீ டூ. எடுத்துவிட்டா சும்மா அதிரும்ல.

-பரமேஷ்

cine271118
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe