""ஹீரோ' படத்திற்கு எனது இசை மிகப்பெரும் பலமென மொத்த படக் குழுவினரும் கூறுகிறார்கள்.

Advertisment

yy

அது முற்றிலும் உண்மை யில்லை. படம் உருவாகி வந்திருக்கும் விதத்தைக் கண்டு நான் பிரம்மித்துப் போய்விட்டேன். படத்தின் ஒவ்வொரு துளியிலும் பங்கேற்றிருக்கும் அத்தனை உறுப்பினர்களும், தங்கள் உடலாலும் ஆத்மாவாலும் முழு உழைப்பைத் தந்து ஒரு மிகப்பெரும் அதிசயத்தை நிகழ்த்தியிருக்கிறார்கள்.

Advertisment

என்னிடம் கதை சொன்னபோது இருந்ததை விட இப்போது மிகப் பிரம்மாண்டமான முறையில் இப்படைப்பை உருவாக்கி யிருக்கிறார்கள். இந்தநிலையில் எனக்கு வேறுவழியே இல்லை. நான் எனது மிகச்சிறந்த உழைப்பைத் தரவேண்டிய நிலைக்கு உந்தப்பட்டேன். டைரக்டர் பி.எஸ். மித்ரன் படத்தில் இசைக்கு உருவாக்கி தந்திருக்கும் வெளி என்னை பல புதிய முயற்சிகளுக்கு இட்டுச்சென்றது.''