Advertisment

இங்கே தயாரிக்க ஆளில்லை!

/idhalgal/cinikkuttu/there-no-preparation-here

நேமி புரொடக்ஷன்ஸ் சார்பில் டாக்டர் அமர் ராமச்சந்திரன் தயாரித்து நடிக்கும் படம் "பயணங்கள் தொடர் கிறது.' டாக்டர் அமர் ராமச்சந்திரன் மலையாளத்தில் பிரபல மலையாள நடிகர்.

Advertisment

தந்தை- மகள் பாசப் பின்னணியில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தை இயக்குநர் அபிலாஷ் இயக்கியுள்ளார். இவர் பிரபல மலையாளத் திரைப்பட இயக்குநர்கள் ஐ.வி. சசி மற்றும் தம்பி கண்ணந்தானம் ஆகியோரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவ

நேமி புரொடக்ஷன்ஸ் சார்பில் டாக்டர் அமர் ராமச்சந்திரன் தயாரித்து நடிக்கும் படம் "பயணங்கள் தொடர் கிறது.' டாக்டர் அமர் ராமச்சந்திரன் மலையாளத்தில் பிரபல மலையாள நடிகர்.

Advertisment

தந்தை- மகள் பாசப் பின்னணியில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தை இயக்குநர் அபிலாஷ் இயக்கியுள்ளார். இவர் பிரபல மலையாளத் திரைப்பட இயக்குநர்கள் ஐ.வி. சசி மற்றும் தம்பி கண்ணந்தானம் ஆகியோரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

production

""போர் மூளும் சூழலில் இலங்கை யிலிருந்து வந்து தமிழகத்திலுள்ள உறவினர் வீட்டில் தனது மகளை ஒப்படைத்து விட்டுச் செல்வதற்காக மகளுடன் வருகி றார் தந்தை. ஆனால், உறவினர்கள் அவரது மகளை தங்களுடன் வைத்துக் கொள்ள மறுத்துவிட, தந்தையும் மகளும் தெருவில் தங்கும் சூழல் ஏற்படுகிறது.

Advertisment

அப்படிப்பட்ட சூழலிலும் தாங்கள் பறவைகள்போல சுதந்திரமாக சிறகடித் துப் பறக்கும் மனநிலைக்குத் தங்களை மாற்றிக்கொள்கிறார்கள் இருவரும்.

இந்தச் சூழ்நிலையிலும் ஒரு தந்தை தனது மகளின் சந்தோஷத்திற்காக என்னவெல்லாம் செய்யமுடியும் என்பதை இந்தப்படம் அழகாகச் சொல்லியிருக்கிறது'' என்கிறார் இயக்கு நர் அபிலாஷ்.

அமர் ராமச்சந்திரன், அவரது பத்து வயது மகள் நேஹா இருவருமே தந்தை- மகளாக நடித்துள்ளனர். இவர்கள் தவிர, நடிகர் பாலாசிங் மிக முக்கியமான கதா பாத்திரம் ஒன்றில் நடித்துள்ளார்.

கேரளாவில் வசிப்பவர் என்றா லும், அபிலாஷ் வளர்ந்தது, படித்தது எல்லாம் செங்கோட்டையில்தான். இவரது கதையில் நடிப்பதற்கு பசுபதி, பார்த்திபன் ஆகியோர் பச்சைக்கொடி காட்டினாலும், வியாபார காரணங் களால் இப்படத்தைத் தயாரிக்க இங்கே தயாரிப்பாளர்கள் யாரும் முன்வர வில்லை.

அப்படியே கால ஓட்டத்தில் வேறு படங்களுக்கு முயற்சிசெய்து கொண்டிருந்தபோதுதான், இந்தப் படத்தின் கதையைக் கேட்டு பிரபல மலையாள நடிகர் டாக்டர் அமர் ராமச்சந்திரன் இந்தப் படத்தில் நடிப்பது டன் தானே தயாரிக்கவும் முன்வந்தார்.

சில காரணங்களால் இலங்கை யில் படப்பிடிப்பு நடத்த அனுமதி கிடைக் காததால் கோவில்பட்டி, பாலக்காடு ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ளார்கள்.

படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கின்றன. இந்தப் படத்தை இங்கே தியேட்டர்களில் ரிலீஸ் செய்வதற்கு முன்பாக பல சர்வதேசத் திரைப்பட விழாக்களுக்கு அனுப்பும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர் இயக்குநர் அபிலாஷும் தயாரிப்பாளர் ராமச்சந்திரனும்.

cini051119
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe