Advertisment

திருட்டுக்கு சவால் விடும் "கிரிஷ்ணம்'!

/idhalgal/cinikkuttu/theft-will-be-challenged-kirisnam

பி.என்.பி சினிமாஸ் சார்பில் பி.என். பல்ராம் தயாரிக்கும் திரைப்படம் "கிரிஷ்ணம்.' இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கும் அக்ஷய் கிருஷ்ணனின் சொந்த வாழ்வில் நிகழ்ந்த சில விறுவிறுப்பான சம்பவங்களே "கிரிஷ்ணம்' படத்தின் கதை. இப்படத் திற்கு திரைக்கதை எழுதி இயக்குவதோடு ஒளிப் பத

பி.என்.பி சினிமாஸ் சார்பில் பி.என். பல்ராம் தயாரிக்கும் திரைப்படம் "கிரிஷ்ணம்.' இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கும் அக்ஷய் கிருஷ்ணனின் சொந்த வாழ்வில் நிகழ்ந்த சில விறுவிறுப்பான சம்பவங்களே "கிரிஷ்ணம்' படத்தின் கதை. இப்படத் திற்கு திரைக்கதை எழுதி இயக்குவதோடு ஒளிப் பதிவையும் மேற்கொள்கிறார் தினேஷ்பாபு. இவர் ஏற்கெனவே மலையாளத்திலும், கன்னடத்திலும் ஒளிப்பதிவாளராக பல வருடங்கள் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

Advertisment

g

மனித உணர்வுகளையும், வாழ்வியலையும் கருவாகக்கொண்டு தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என மூன்று மொழிகளில் உருவாகும் இப்படத்தில் ஐஸ்வர்யா உல்லாஸ், மமிதா பைஜு, சாய் குமார், ரெஞ்சி பனிக்கர், சாந்தி கிருஷ்ணா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களேற்று நடிக்கிறார்கள்.

Advertisment

ஹரிபிரசாத்தின் இசையில் பாடல்களை சந்தியா எழுதுகிறார்.

"கிரிஷ்ணம்' ஒரு புரட்சிகரமான கதைக்களத்தைக் கொண்டது. வாழ்க்கையில் எதிர்பாராத சில நிகழ்வு களைச் சந்திக்கும் ஒரு நபரின் பயம் மற்றும் மகிழ்ச்சி கலந்த உணர்ச்சிகளின் தொகுப்பே இந்த "கிரிஷ்ணம்' திரைப்படம்.

உண்மைக் கதை என்பதோடு மட்டுமல்லாமல்; அந்தக் கதையோடு தொடர்புடைய நபரே இப்படத்தில் கதாநாயகனாக நடிப்பது இப்படத்தின் சிறப்பு. பரபரப்புமிக்க "கிரிஷ்ணம்' எல்லாரை யும் ஆச்சரியப்படுத் தும் என்பதில் சந்தேக மில்லை.

மேலும் தற்போது சினிமா உலகத்திற்கு பெரும் சவாலாக விளங்கும் இணையத் திருட்டுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்தியா விலேயே முதன்முறையாக டி.ஆர்.எம் தொழில்நுட்பம் பயன்படுத்தபட உள்ளது.

Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe