சிம்புவும் அதாவது எஸ்.டி.ஆரும் சர்ச்சையும் உடன்பிறந்த சகோதரர்கள்போல. கொஞ்ச நாளைக்கு முன்னால சிம்புமீது ஒரு தயாரிப்பாளர் சென்னை ஐகோர்ட்டில் கேஸ் போட்டு நாறடிச்சார். மேட்டர் என்னன்னா, ""எனது படத்தில் நடிப்பதற்காக ஒரு கோடி ரூபாய் அட்வான்ஸ் கொடுத்து ஒரு வருஷம் ஆகிருச்சு. ஆனா சிம்பு நடிச்சுக் கொடுக்காம டிமிக்கி கொடுக்குறாரு.

simbu

அவரிடமிருந்து பணத்தை வசூலிக்க உதவுங்கள்'' என கோர்ட்டை நாடினார் அந்தத் தயாரிப்பாளர்.

வழக்கு விசாரணைக்கும் ஆஜராகாமல் சிம்பு டிமிக்கி கொடுத்ததால் டென்ஷனான நீதிபதி, ""வாங்கிய பணத்தை வட்டியோடு சேர்த்துக் கொடுக்கவில்லை என்றால் சிம்புவின் வீட்டை ஜப்தி செய்யலாம்'' என உத்தரவிட்டார்.

Advertisment

அதற்குப்பிறகு என்ன நடந்ததோ, ஏது நடந்ததோ அந்த விஷயம் அப்படியே அமுங்கிப் போச்சு.

அதற்கடுத்து சில நாட்களில் வந்தார் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன். ""எனது தயாரிப்பில் ரிலீசான "அன்பானவன் அடங்காதவன் அசராதவன்' படத்தை அலங்கோலமாக எடுத்து என்னை நஷ்டப்படுத்தினார்கள் சிம்புவும் டைரக்டர் ஆதிக் ரவிச்சந்திரனும். நான் கேட்டபோது "இரண்டாம் பாகத்தில் நடித்து நஷ்டத்தை சரி பண்ணிடுறேன்' என்றார் சிம்பு. ஆனால் கால்ஷீட் கொடுக்காமல் இழுத்தடிக்கிறார். எனவே சிம்புவின் அடுத்த படங்களுக்கு ரெட் கார்டு போடவேண்டும்'' என தயாரிப்பாளர் சங்கத்தில் பஞ்சாயத்தைக் கூட்டினார் மைக்கேல் ராயப்பன்.

simbu

Advertisment

இப்போது களத்தில் குதித்திருப்பவர் பி.எல். தேனப்பன். 2006-ஆம் ஆண்டு இவரது தயாரிப்பில் ரிலீசான "வல்லவன்' படத்தின் மூலம் தான் டைரக்டராக அறிமுகமானார் சிம்பு. அந்தப் படத்தில் வரும் ""அம்மாடி ஆத்தாடி உன்னை எனக்குத் தரியாடி'' பாடலுக்காக சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் ரீமா சென்னுடனும் நயன்தாராவுடனும் சிம்பு டான்ஸ் ஆடும் சீனுக்காக தனித் தனியாக செட் போட்டார் தேனப்பன்.

காலையில் ஆறு மணிக்கு ஷூட்டிங் ஆரம்பம் என்றால் மதியம் மூன்று மணிக்கு வருவார் சிம்பு. வந்ததும் ""வயிறு வலிக்குது, தலைவலிக் குது, அதனால நாளைக்கு ஷூட்டிங் வச்சிக்கிருவோம்'' எனச் சொல்லிவிட்டு ஜூட் விட்டுவிடுவார். நாளைக்கு என்பது 15 நாட்களாகியும் ஷுட்டிங் நடக்காததால், செட் வாடகை எகிறி, தேனப்பனுக்கு பி.பி. எகிறியது. மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கி, ஒருவழியா படத்தை முடித்து ரிலீஸ் செய்தார். படமோ நஷ்டம். இப்ப தேனப்பன் சொல்லவர்றது என்னன்னா """வல்லவன்' இந்தி ரீமேக்கை எஸ்.என். மீடியா என்ற நிறுவனத்திற்கு 2016 நவம்பர் 3-ஆம் தேதியே விற்றுவிட்டேன். ஆனால் இப்போது சிம்புவின் அப்பா டி.ஆரோ ரீமேக் உரிமை என்னிடம் இருக்கு எனச் சொல்லியதோடு, உரிமையை வாங்கியவர்கள்மீதும், விற்ற என்மீதும் பழிசுமத்தும் விதமாகப் பேசியிருக்கார்.

என்னைப் போலவே எத்தனையோ தயாரிப்பாளர்கள் சிம்புவால் எல்லாவற்றையும் இழந்து தவிக்கிறோம்'' என கண்ணீரோடு அறிக்கை விட்டுள்ளார்.

விடுங்கய்யா... விடுங்கய்யா... சிம்புன்னாலே சேட்டை தானுங்கய்யா...

-பரமு