Advertisment

அத நெனச்சு பயமா இருந்துச்சு -சொன்னது ஒரு ஹீரோயின்!

/idhalgal/cinikkuttu/thats-nervous-scare-just-heroine

ஸ்.ஜே. சூர்யா நடிக்கும் "மான்ஸ்டர்' படத்தின் ஆடியோ & டிரைலர் வெளியீட்டு விழாவில், படத்தின் ஹீரோயின் பிரியா பவானி சங்கர் பேசும்போது...

Advertisment

""எஸ்.ஜே. சூர்யா நாயகன் என்றதும், அவருடன் எனக்குப் பொருத்தமாக இருக்குமா என்று தயங்கினேன். ஆனால் இயக்குநர் முதலில் கதை கே

ஸ்.ஜே. சூர்யா நடிக்கும் "மான்ஸ்டர்' படத்தின் ஆடியோ & டிரைலர் வெளியீட்டு விழாவில், படத்தின் ஹீரோயின் பிரியா பவானி சங்கர் பேசும்போது...

Advertisment

""எஸ்.ஜே. சூர்யா நாயகன் என்றதும், அவருடன் எனக்குப் பொருத்தமாக இருக்குமா என்று தயங்கினேன். ஆனால் இயக்குநர் முதலில் கதை கேட்டு முடிவு செய்யுங்கள் என்று கூறினார்.

Advertisment

சங்கர் கூறியது போல் என்னைப் பாதுகாப்பாக வைத்திருந்தார். படக்குழுவினருடன் ஜாலியாகப் பணியாற்றினேன்'' என்றார்.

இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் பேசும்போது ""இதுவரை யாரும் பார்த்திராத எஸ்.ஜே.சூர்யாவை இப்படத்தில் பார்க்கலாம். எங்கு சென்றாலும் பிரியா பவானி ஷங்கருக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்காகவும் பிரியாவின் கதாபாத்திரத்தை நன்றாக அமைத்திருக்கிறோம்.'' என்றார்.

r

ஹீரோ எஸ்.ஜே.சூர்யா பேசும்போது...

""இந்தப் படத்தில் எனக்கு மிகப் பெரிய ஆசிர்வாதம் இருக்கிறது. எலி என்பது பிள்ளையார் வாகனம். அதிலிருந்தே எனக்கு ஆசிர்வாதம் ஆரம்பித்தது. பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ்தான் இப்படத்தின் கதாநாயகன். மூன்று தயாரிப்பாளர்களும் கதையைத் தேர்ந்தெடுப்பதிலிருந்து அனைத்தும் தரமானதாக வர வேண்டும் என்பதில் கவனமாக இருப் பார்கள். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளிலும் அவர்களின் படைப்புகள் வெளியாகும்.

பிரியா பவானி ஷங்கர் அழகான, திறமையான மற்றும் தனித்துவமான நடிகை. நிச்சயம் வித்யாபாலன் மாதிரி வருவார்'' என்றார்.

எல்லாருமே பிரியா பவானி ஷங்கர் புகழ்பாடிய "மான்ஸ்டர்' வருகிற 17-ஆம் தேதி ரிலீசாகிறது.

-ஸ்டில்ஸ்: எஸ்.பி. சுந்தர்

cine210519
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe