ருண்விஜய் ஹீரோவாக நடிக்கும் "சினம்' படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு மற்றும் சென்னையில் மிகப்பெரும் பொருட்செலவில் உருவாக்கப்பட்ட பிரம்மாண்ட அரங்கில், ஆக்ரோஷமான சண்டைக்காட்சியை எடுத்து முடித்துள்ளது படக்குழு.

இப்படம் குறித்து இயக்குநர் ஜி.என்.ஆர். குமரவேலன் என்ன சொல்றாருன்னா...

Advertisment

arunvijay

""நடிகர் அருண் விஜய்யின் ஒத்துழைப்பு இல்லையெனில் எதுவுமே சாத்தியமாகியிருக்காது. அவர் தற்போது தொடர் வெற்றிகளுடன், ஒரே கட்டமாக பல படங்களில் நடித்துவருகிறார்.

அவரது சமீபத்து வெளியீடான "மாஃபியா' படத்தின் வெளியீட்டுப் பணிகளுக்கும் அவர் நேரம் ஒதுக்கவேண்டி யிருந்தது. ஆனால், இத்தனை இடையராத பணிகளுக்கு மத்தியிலும் இப்படத்திற்கு நேரம் ஒதுக்கி, சரியான நேரத்தில் படப்பிடிப்பை முடிக்க பெரும் ஆதரவாக இருந்தார். நம்பிக்கை மற்றும் உழைப்பின்வழியாக அவர் இன்று அடைந்திருக்கும் இடம் மிகப்பெரிது. அதற்கு முற்றிலும் தகுதியானவர் அவர். படப்பிடிப்பை இத்தனை சீக்கிரம் முடிக்க, கடினமாக உழைத்த எனது படக்குழுவிற்கு இந்நேரத்தில் நன்றி சொல்லிக்கொள்கிறேன்.''

Advertisment

இப்படத்தில் அருண் விஜய் காவல் அதிகாரி பாத்திரத்தில் நடிக்க, பாலக் லால்வானி நாயகியாக நடிக்கிறார். காளிவெங்கட் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார்.

Movie Slides Pvt Ltd சார்பில் ஆர். விஜயகுமார் இப்படத்தை தயாரிக்கிறார்.

_______________

நான் அப்படிப்பட்டவன் அல்ல!

""கடந்த "சினிக்கூத்து' இதழில் "மேனேஜர் பிடியில் இளம் நடிகை!' என்ற தலைப்பில் வந்த செய்தியில் என்னைப் பற்றி தவறான தகவல்கள் வெளியாகியுள்ளன.

அந்த செய்தியில் குறிப்பிட்டுள் ளதுபோல எந்த சம்பவமும் நடக்கவில்லை. சினிமாவில் எனது வளர்ச்சியைப் பிடிக்காத சிலர், திட்டமிட்டே என்னைப் பற்றி வதந்தியைப் பரப்புகிறார்கள். எந்த தயாரிப்பாளரிடமும் நான் அப்படி நடந்துகொண்டதில்லை, நடந்து கொள்பவனும் அல்ல.'' இப்படி ஒரு விளக்கத்தை நமது அலுவலகத் திற்கு நேரில்வந்து வழங்கினார் நடிகை வரலட்சுமியின் மேனேஜர் ஆதிலிங்கம்.