"ஆதித்ய வர்மா'வில் துருவ் விக்ரமின் நடிப்பும், படத்தின் வணிக ரீதியான வெற்றியும் நல்ல ஓபனிங்கைக் கொடுத்ததால்... ரசிகர்களுக்கும் பத்திரிகை யாளர்களுக்கும் படக்குழுவினர் சார்பாக நன்றி சொல்லும் விழா சென்னையிலுள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது.
படத்தில் துருவின் நண்பராக நடித்த தனுஷ் ""என்னை விக்ரம் சார்தான் இந்தக் கேரக்டரில் நடிக்க
"ஆதித்ய வர்மா'வில் துருவ் விக்ரமின் நடிப்பும், படத்தின் வணிக ரீதியான வெற்றியும் நல்ல ஓபனிங்கைக் கொடுத்ததால்... ரசிகர்களுக்கும் பத்திரிகை யாளர்களுக்கும் படக்குழுவினர் சார்பாக நன்றி சொல்லும் விழா சென்னையிலுள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது.
படத்தில் துருவின் நண்பராக நடித்த தனுஷ் ""என்னை விக்ரம் சார்தான் இந்தக் கேரக்டரில் நடிக்கச் சொன்னார். துருவிடம் இப்படியொரு நடிப்பை எதிர்பார்க்கவே இல்லை. ட்ரக் அடிக்கும் காட்சிகளில் எல்லாம் அவர் அசத்தலாக நடித்திருந்தார். படத்திற்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி.''
இயக்குநர் கிரிசாயா
""தமிழ் ரசிகர்களுக்கு பெரிய நன்றி. படத்திற்கு ஆடியன்சிடம் ரெஸ்பான்ஸ் இருக்கு. விக்ரம் சார் இந்தப் படத்திற்காக முழுமையாக உழைத்துள்ளார். அவர் இல்லையென்றால் இப்படம் இல்லை. துருவ் மிகச்சிறந்த நடிகர்.''
துருவ் விக்ரம்
""படத்திற்கான ரெஸ்பான்ஸைப் பத்திக் கேள்விப்படும்போது என்ன சொல்வதென்றே தெரியவில்லை. இதற்காகத்தான் இரண்டு வருடம் காத்திருந்தோம் என்பதை நினைத்தால் ரொம்ப சந்தோஷமா இருக்கிறது. கிரியாசா சார் வெரி ஹார்ட் ஒர்க்கர். படத்தில் உழைத்த அத்தனை டெக்னீஷியன் களுக்கும் நன்றி. நான் நல்லா நடித்த காட்சிகளில் எல்லாம் என் அப்பா இருப்பார். நான் சுமாராக நடித்த காட்சி களில்தான் நான் இருப்பேன்.''
நடிகர் விக்ரம்
""இது அருமையான தருணம். ஒரு இதழில் விமர்சனம் எழுதி இருந் தார்கள். "துருவ்- சியான் விக்ரமின் மகன் நேற்று. துருவின் அப்பா சியான் விக்ரம் இன்று. சபாஷ்' என்று எழுதி இருந்தார்கள். மிகவும் சந்தோஷமாக இருந்தது. ஒரு தந்தைக்கு இதைவிடப் பெருமை இருக்க முடியாது! ஊடகங்கள் மொத்தமும் துருவைக் கொண்டாடிய தற்கு ரொம்ப நன்றி.
இவனால் நடிக்க முடியும் என்று நம்பி என் வீட்டிற்கு வந்த தயாரிப்பாளர் முகேஷ் சாருக்கு நன்றி. இந்தப் படத்தின் எல்லா உதவி இயக்குநர்களுக்கும், ஒட்டுமொத்தமாக எல்லா பத்திரிகை, காட்சி ஊடகங் கள் அனைவருக்கும் நன்றி.''