சமீபத்தில் வெளியான "நட்பே துணை' படத்தின்மூலம் கவனம் ஈர்த்தவர் அஸ்வின். படத்தில் ஆசிப் என்னும் பெயரில் ஹாக்கி பிளேயர் கேரக்டரில் நடித்து பலரது பாராட்டுதலைப் பெற்றவர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/adhi.jpg)
படத்தைப் பார்த்த பலரின் பாராட்டினால் குளிர்ந்து போயிருக்கும் அஸ்வினை சந்தித்துப் பேசினோம்.- ""நான் சிங்கப்பூரில் மாஸ்டர் ஆப் பிஸினஸ் மேனேஜ்மெண்ட் படிப்பை முடித்துவிட்டு, "ஹில் பிரீஸ் ஹோட்டல் ரிசார்ட்ஸ்' நிறுவனத்தில் உயரிய பொறுப்பில் இருந்தேன். கை நிறைய சம்பளம், கௌரவமான வேலை என்று இருந்தவன். அத்துடன் டான்ஸ் ஸ்கூல், ஜிம் நடத்திக் கொண்டிருந்தேன்.
அந்த நேரத்தில் "யானும் தீயவன்' என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு வந்தது. என் நடிப்புக்கு நல்ல பெயர் கிடைத்தது. படம் வெளியான நேரத்தில் பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்டது. அதனால் படத்திற்கு வெற்றி கிடைக்காமல் போச்சு. அதற்கப்புறம் "பஞ்சாட்சரம்' படத்தில் செகண்ட் ஹீரோவாக நடித்தேன்.
அந்தப்படம் விரைவில் ரிலீசாகப்போகுது. என்னை நானே டெவலப் செய்துகொள்ள வேண்டும் என்று "கூத்துப் பட்டறை'க்குப்போய் பயிற்சி எடுத்தேன் அதற்கு எனக்கு கிடைத்த பரிசு, ஹிப் ஆப் ஆதி மூலம் "நட்பே துணை' படம்தான். எனக்கு ஒரு நல்ல கேரக்டர் கொடுத்து, என் வாழ்க்கைகு ஒரு நல்ல இடத்தை ஏற்படுத்திக்கொடுத்த அவருக்கு நான் என்றென்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். அதேமாதிரி தயாரிப்பாளர் சுந்தர். ஸ்ரீ. சாருக்கும், குஷ்பு மேடத்துக்கும் நன்றியை சொல்லிக் கொள்கிறேன்'' என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2019-04/adhi-t.jpg)