Advertisment

அடுத்த வருடம் எனக்கு தல தீபாவளி'' -பிரியா ஆனந்த் கலகல பேச்சு!

/idhalgal/cinikkuttu/thaladiwali-me-next-year-priya-anand

மிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கத்தின் தீபாவளி கொண்டாட்டம் நிகழ்ச்சியில் நடிகை பிரியா ஆனந்த் பேசும்போது, ""நான் நிறைய விழாவில் கலந்துக்கொண்டிருக்கிறேன். ஆனால், இந்த விழா எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது. நான் எப்போதும் தீபாவளி கொண்டா

மிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கத்தின் தீபாவளி கொண்டாட்டம் நிகழ்ச்சியில் நடிகை பிரியா ஆனந்த் பேசும்போது, ""நான் நிறைய விழாவில் கலந்துக்கொண்டிருக்கிறேன். ஆனால், இந்த விழா எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது. நான் எப்போதும் தீபாவளி கொண்டாட மாட்டேன்.

Advertisment

gg

என்னுடைய பெற்றோர் கள் அமெரிக்காவில் இருப்பதால் என்னுடைய பாட்டி கூடத்தான் மிகவும் எளிமையாக தீபாவளி கொண்டாடுவேன். ஆனால், இந்த வருடம் பத்திரிகையாளர்களாகிய உங்களுடன் தீபாவளி கொண்டாடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. நானும் ஜர்னலிசம் படித்திருக்கேன். நான் சினிமாத்துறைக்கு வந்து பத்து வருடங்கள் ஆகிவிட்டது. "வணக்கம் சென்னை' படம்தான் நான் நடித்ததில் ரொம்ப பிடித்தது. ஹீரோவுக்கு நிகராக என்னுடைய கதாபாத்திரமும் இருக்கும்.

Advertisment

இந்த வருடம் என்னுடைய நடிப்பில் துருவ் விக்ரம் கதாநாயக னாக நடித்திருக்கும் "ஆதித்ய வர்மா' விக்ரம் சார் என்னை நன்றாக கவனித்துக்கொண்டார். தெலுங்கில் "அர்ஜுன் ரெட்டி', இந்தியில் "கபீர் சிங்' பார்த்திருப்பீர்கள். ஆனால், "ஆதித்ய வர்மா' திரைப்படம் வித்தியாசமாக புதுமையாக இருக்கும் என்றார்.

சில நேரம் பிரியாணியை காலை உணவாககூட சாப்பிடுவேன். ஆனால் நான் கடந்த ஒன்றரை வருடமாக சைவம் உணவை மட்டுமே சாப்பிட்டு வருகிறேன்.

அதனால்கூட நான் குண்டாகாமல் இருக்கலாம்.

அடுத்த வருடம் எனக்கு தல தீபாவளிதான்'' என கலகலப்பாகப் பேசினார்.

cini121119
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe