Advertisment

தடம் -விமர்சனம்

/idhalgal/cinikkuttu/thadam-review

ரு காதல், ஒரு கள்ளக் காதல், ஒரு கொலை. அந்தக் கொலை வழக்கிலிருந்து கொலையாளி எப்படித் தப்பிக்கிறான்? இதுதான் "தடம்'. எழில், கவின் என இரட்டை வேடங்களில் வருகிறார் ஹீரோ அருண் விஜய். எழிலுக்கு ஜோடியாக தான்யா ஹோப், கவினுக்கு ஸ்மிருதி வெங்கட், போலீஸ் இன்ஸ்பெக்டராக ஃபெப்சி விஜயன், சப்-இன

ரு காதல், ஒரு கள்ளக் காதல், ஒரு கொலை. அந்தக் கொலை வழக்கிலிருந்து கொலையாளி எப்படித் தப்பிக்கிறான்? இதுதான் "தடம்'. எழில், கவின் என இரட்டை வேடங்களில் வருகிறார் ஹீரோ அருண் விஜய். எழிலுக்கு ஜோடியாக தான்யா ஹோப், கவினுக்கு ஸ்மிருதி வெங்கட், போலீஸ் இன்ஸ்பெக்டராக ஃபெப்சி விஜயன், சப்-இன்ஸ்பெக்டராக வித்யா பிரதீப் என அளவான கேரக்டர்களை வைத்துக்கொண்டு, தனது கதை- திரைக்கதையால் இரண்டு மணி நேரம் விறுவிறுப்பான சூப்பர் படம் தந்திருக்கிறார் டைரக்டர் மகிழ் திருமேனி.

Advertisment

tt

அருண் விஜய்யின் சினிமா கேரியரில் மிகச்சிறப்பான படம் தான் "தடம்'. இடைவேளைக்குப் பின் வரும் காட்சிகளில் முக்கால் வாசி தனது நடிப்பில் செம ஸ்கோர் பண்ணியிருக்கிறார் அருண் விஜய். அதேபோல் படத்தில் வரும் போலீஸ் கான்ஸ்டபிள்கள், அருண் விஜய் டாய்லெட் போக வாளி கொண்டுவரும் சிறுவன், அருண் விஜய்யின் நண்பனாக வரும் யோகிபாபு என அத்தனை கேரக்டர்களிடமும் நடிப்பை வாங்கி, நம்மை அசரடிக்கிறார் மகிழ் திருமேனி. அதிலும் க்ளைமாக்ஸ் லீடுக்கு முன்பாக இரண்டு அருண் விஜய்யும் பேசும் சீன்கள் டாப் க்ளாஸ்.

Advertisment

அருண் விஜய்யின் அம்மாவாக ஃப்ளாஷ்பேக்கில் வரும் சோனியா அகர்வாலும் நிறைவான நடிப்பைத் தந்திருக்கிறார்.

அருண் விஜய்- தான்யா ஹோப் இருவருக்குமிடையிலான ரொமாண்டிக் சீனில் கல்கத்தா ஹவுரா பாலத்தையும், லேடீஸ் பிராவையும் ஒப்பிட்டு, அருண் விஜய் பேசும் டயலாக் இருக்கே, செம "தூக்கல்'. செமத்தியான க்ரைம் த்ரில்லர் படம் பார்த்து எத்தனை நாளாச்சு என்ற ஏக்கத் தைப் போக்கிய டைரக்டர் மகிழ் திருமேனியையும், படத்தைத் தயாரித்த இந்தர்குமாரையும் தாராளமாக பாராட்டலாம்.

cine120319
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe