ருண் விஜய், மகிமா நம்பியார் நடிப்பில் அறிவழகன் இயக்கத்தில் வெளியாகி பெரும் வெற்றிபெற்ற "குற்றம் 23' திரைப் படத்தை ரெதான் - தி சினிமா பீப்புள் சார்பாக தயாரித்தவர் இந்தர் குமார். தற்போது "தடம்' படத்தை பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார்.

Advertisment

thadam

இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் "தடம்' படத்தில் தான்யா ஹோப், ஸ்முருதி, பெப்சி விஜயன், யோகி பாபு, ஜார்ஜ், சோனியா அகர்வால், வித்யா பிரதீப், மீரா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு யு/ஏ சர்டிபிகேட் கிடைத்துள்ளது.

இப்படத்தின் இசை மற்றும் பட வெளியீடு தேதி மிகவிரைவில் அறிவிக்கப்படும் என்று தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.