"ஆடை'ன்னு ஒரு படத்தோட ஸ்டில்லை வெளியிட்டிருக்கிறார்கள். அமலா பால் வித்தியாசமான கெட்டப்பில் டெர்ரராக காட்சியளித்தார். "ஆடை' படத்தில் கிட்டத்தட்ட ஆடையெல்லாம் கிழிந்த நிலையில் காட்சியளித்தார்.

Advertisment

amalapal

"மேயாத மான்' படத்தின் இயக்குநர் ரத்னகுமார் இந்தப் படத்தை இயக்குகிறார். ""இலவசப் பொருட்களால் ஒரு சமுதாயம் சீரழிந்தது. எதிர்காலத் தலைமுறையை இலவச இணைய இணைப்பு கெடுக்கப்போகிறது என்பதைச் சொல்கிறோம். அமலா பாலின் திறமையை யாரும் இதுவரை சரியாகப் பயன்படுத்தவில்லை. அவர் இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தப் படத்தில் அமலா பாலின் கேரக்டர் மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் சவால் விடுக்கிற கேரக்டர். இந்தக் கதையைக் கேட்டதும் ரொம்பவும் பாதிக்கப்பட்டதாகக் கூறினார்.

யோகா பயிற்சி எடுத்திருப்பதால் இந்தக் கேரக்டரை துணிச்சலாக செய்ய முடியும் என்றார். காட்சிகளுக்கு பைனல் டேக் போவதற்கு முன் பலமுறை டெஸ்ட் ஷூட் போகிறோம் என்கிறார்'' ரத்னகுமார். எப்படியோ அமலா பாலை வைத்து சோதனை பண்ணா சரிதான்.