Advertisment

டெண்ட்' அடிக்கும் டயானா!

/idhalgal/cinikkuttu/tent-hit-diana

யக்குநர் மணிரத்னத்தின் இயக்கத்தில் வெளியாக விருக்கும் "செக்கச் சிவந்த வானம்' படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக நடித்திருப்பவர் நடிகை டயானா எரப்பா.

Advertisment

கர்நாடகத்திலுள்ள கூர்க்கில் பிறந்த இவர் 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற "மிஸ் இந்தியா' போ

யக்குநர் மணிரத்னத்தின் இயக்கத்தில் வெளியாக விருக்கும் "செக்கச் சிவந்த வானம்' படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக நடித்திருப்பவர் நடிகை டயானா எரப்பா.

Advertisment

கர்நாடகத்திலுள்ள கூர்க்கில் பிறந்த இவர் 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற "மிஸ் இந்தியா' போட்டியில் முதல் பத்து போட்டியாளர்களுள் ஒருவராகத் திகழ்ந்தார். பின்பு 2012-ல், உலகின் மிகவும் மதிப்புமிக்க சர்வதேச மாடலிங் போட்டியான ஷாங்காய் "எலைட் மாடல் லுக்' போட்டியில் இந்தியாவின் சார்பாகப் பங்கேற்றார்.

dyana

பின்பு "கிங்ஃபிஷர்' காலெண்டர் 2015 மற்றும் 2017, "லாக்மே பேஷன் வீக்', "அமேசான் பேஷன் வீக்', "கௌச்சர் வீக்' போன்ற பிரசத்திபெற்ற பேஷன் பத்திரிகைகளில் இடம்பெற்றார் நடிகை டயானா எரப்பா.

மேலும் சர்வதேச பேஷன் பத்திரிக்கைகளான "வோக்',

"எல்லி', "ஹார்ப்பர்ஸ் பஜார், காஸ்மோபாலிட்டன்' மற்றும் "ஜி.கியூ' போன்றவற்றில் இவரது புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.

தருண் தஹிலியானி, மனிஷ் மல்ஹோத்ரா, அஞ்சு மோடி, சாந்தனு நிக்கில், கவுராவ் குப்தா, சுனீத் வர்மா, அனிதா டோங்ரே, பாயல் சிங்கல், மோனிஷா ஜெய்சிங், லைப் ஸ்டைல், பீமா ஜூவல்லரி மற்றும் ஆஸ்வா ஜூவல்லரி உள்ளிட்ட பல முன்னணி டிசைனர்களின் விளம்பர மாடலாக நடித்துள்ளார். கோலிவுட்டிலேயே டெண்ட் அடித்து தங்கிவிடும் முயற்சியில் முனைப்பாக இருக்கிறார் டயானா எரப்பா.

எல்லாம் சரிதாம்பா. "எல்லாத்துக்கும்' சரிப்பட்டு வந்தா சரிதாம்பா.

cine021018
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe