டுமையான கஜா புயலால் நாகப்பட்டணம், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மிகக் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளன. அந்த மூன்று மாவட்ட மக்கள் படும் துயரம் சொல்லிமாளாது. இருக்க வீடு இல்லை, குடிக்க நீர் இல்லை, பசிக்கு உணவில்லை என்னும் நிலையில் நித்தம் நித்தம் செத்துப் பிழைத்துக் கொண்டிருக்கிறார்கள் மக்கள்.

Advertisment

அல்லாடும் அம்மக்களின் கண்ணீர் துடைக்க திரைப் பிரபலங்கள் தங்களால் முடிந்த உதவிகளை நேரடியாகவும் தன்னார்வத் தொண்டு நிறுவ னங்கள் மூலமாகவும் செய்து வருகின்றனர்.

உதவிய உள்ளங்கள்

ரஜினி: 50 லட்ச ரூபாய் பெறுமானமுள்ள நிவாரணப் பொருட்களை, தனது நேரடி மேற்பார் வைமூலம், ராக வேந்திரா கல்யாண மண்டபத்திலிருந்து லாரிகளில் ஏற்றி பாதிக்கப்பட்ட மக்களுக்கு, ரஜினி மக்கள் மன்றத்தின் தலைமை நிர்வா கிகள்மூலம் அனுப்பினார்.

விஜய்சேதுபதி: 25 லட்சம் செலவில் அத்தியாவசிய நிவாரணப் பொருட்கள், மின்சார வசதி முற்றிலும் தடைப்பட்டுள்ளதால் ஆயிரக்கணக்கில் சார்ஜிங் டார்ச்லைட்டுகள், லட்சக்கணக்கான மரங்கள் வேருடன் சாய்ந்துவிட்டதால் அதற்கு முன்னுரிமை கொடுத்து, பாதிப்புக் குள்ளானவர்களின் தோப்புகளை புனரமைத்தல், தென்னை, பலா மரக்கன்று களை நடுதல் உள்ளிட்ட அனைத்துப் பணிகளையும் தனது ரசிகர்கள் மேற்கொள் வார்கள் என அறிவித்துள்ளார்.

Advertisment

cyclone

விஜய்: பாதிப்புக்குள்ளான மாவட்டங்களில் இருக்கும் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு ஆன்லைன்மூலம் தலா 4 லட்ச ரூபாய் அனுப்பி, அதன்மூலம் நிவாரணப் பொருட்களை மக்களுக்கு வழங்குமாறு, மாநிலத் தலைவர் புஸ்ஸி ஆனந்த்மூலம் முடுக்கிவிட்டுள்ளார்.

சிவகார்த்திகேயன்: முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு 10 லட்சம், தனது சொந்த முயற்சியில் 10 லட்சத்திற்கான நிவாரணப் பொருட்கள். ராகவா லாரன்ஸ்: முற்றிலும் இடிந்து தரைமட்டமாகி வீடுகளை இழந்தவர்களுக்கு 50 புதிய வீடுகள்.

cyclone

Advertisment

விக்ரம்: முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ஆன்லைன் மூலம் 25 லட்ச ரூபாய்.

சூர்யா: 20 லட்சம், கார்த்தி: 15 லட்சம், ஜோதிகா: 10 லட்சம், சிவகுமார்: 5 லட்சம்.

வைரமுத்து: 5 லட்சம்.

டைரக்டர் ஷங்கர்: முதலமைச்சர் நிவாரண நிதிக்கு 10 லட்சம், மற்றும் 10 லட்சத்திற்கான நிவாரணப் பொருட்கள் நேரடியாக.

ஜி.வி.பிரகாஷ்: இரண்டு லாரிகளில் மிக அத்தியாவ சியமான நிவாரணப் பொருட்கள்.

கஸ்தூரி: 12 லட்சம் பெறுமானமுள்ள நிவாரணப் பொருட்கள்.