/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/kalamjeyam.jpg)
"தமிழர் நலம் கலை பண்பாட்டு இயக்கம்' என்ற பட நிறுவனம் தயாரிக்கும் படம் "முந்திரிக்காடு'. இந்தப் படத்தில் இயக்குனர் சீமான் போலீஸ் அதிகாரியாக கதையின் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.
நாயகனாக அறிமுகமாகும் புகழ், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான சி. மகேந்திரனின் மகன். கதாநாயகியாக சுபப்ரியா நடிக்கிறார்.
மற்றும் ஜெயராவ், சோமு, சக்திவேல், ஆம்பல்திரு, கலைசேகரன், பாவா லட்சுமணன் ஆகியோரும் நடிக்கிறார்கள்.
படம் பற்றி இயக்குனரிடம் கேட்டோம்...
""சமீபத்தில் இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை ஹாரிஸ் ஜெயராஜ் அவர்களிடம் வெளியிடக் கேட்டோம். எந்த மறுப்பும் சொல்லாமல் சம்மதம் தெரிவித்ததோடு ஒவ்வொரு கலைஞருக்கும் வாழ்த்து தெரிவித்து பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார்.
அவர் வெளியிட்ட ராசி ஏறக்குறைய இருபது லட்சம்பேர் பார்த்துள்ளனர். அதோடு உலகம் முழுக்க உள்ள நண்பர்கள் எனக்கு வாழ்த்துத் தெரிவித்தனர்.
ஆணவக் கொலை பற்றிய பதிவாக "இந்த முந்திரிக்காடு' இருக்கும்'' என்கிறார் இயக்குனர் மு.களஞ்சியம்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2018-02/kalamjeyam-n.jpg)