Advertisment

தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்கும் சிம்ரன்!

/idhalgal/cinikkuttu/taolailaalarakalaina-vayairaraila-ataikakauma-caimarana

ஹீரோயினாக கொடிகட்டிப் பறந்த ஸ்லிம் இடுப்பழகி சிம்ரன், தனது நெடுநாள் காதலர் தீபக் பாஹாவைத் திருமணம் செய்துகொண்டு, ஒரு குழந்தைக்குத் தாயானார்.

Advertisment

அதன்பின்னும் தனது கெத்தை விட்டுக் கொடுக் காமல் கேரக்டர் ரோல்களில் பின்னி எடுத்தார். சென்னை கிழக்குக் கடற் கரைச் சாலையில் அருமையான வீடு, அந்த வீட்டின் அருகே தனது சினிமா தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்து, கணவர் தீபக்கிடம் ப

ஹீரோயினாக கொடிகட்டிப் பறந்த ஸ்லிம் இடுப்பழகி சிம்ரன், தனது நெடுநாள் காதலர் தீபக் பாஹாவைத் திருமணம் செய்துகொண்டு, ஒரு குழந்தைக்குத் தாயானார்.

Advertisment

அதன்பின்னும் தனது கெத்தை விட்டுக் கொடுக் காமல் கேரக்டர் ரோல்களில் பின்னி எடுத்தார். சென்னை கிழக்குக் கடற் கரைச் சாலையில் அருமையான வீடு, அந்த வீட்டின் அருகே தனது சினிமா தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்து, கணவர் தீபக்கிடம் பொறுப்புகளை ஒப்படைத்தார்.

simran

தனது முதல் தயாரிப்பாக "பத்ரகாளி' படத்தை ஆரம்பித்து, கௌரி சங்கர் என்பவரை டைரக்டராக்கினார். ஆயத்தப் பணிகளெல்லாம் முடிந்து, முதல் கட்ட ஷூட்டிங் பத்து நாட்கள் நடந்து முடிந்துள் ளது. பத்து நாட்கள் படத்தில் பணியாற்றிய கேமரா அசிஸ் டென்டுகள், லைட்மேன்கள், மேக்-அப் உதவியாளர்கள், நளபாக ஆட்கள், டிராலி தள்ளுபவர்கள் என அனைவருக்கும் சம்பளத்தைச் செக்கில் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தார் சிம்ரனின் கணவர் தீபக் பாஹா.

Advertisment

தீபக் கொடுத்த செக்கை பேங்கில் தொழிலாளர்கள் போட்டதும் பணம் இல்லை எனத் திரும்பி விட்டது. சரி, தீபக் கணக்கு வைத்திருக்கும் தனியார் வங்கிக் கிளையிலேயே போடுவோம் என போனால், அங்கேயும் பணமில்லையாம். பத்து நாள் சம்பளத்தை எடுக்க அஞ்சு நாள் வேலையைவிட்டுவிட்டு அலைந்து கடுப்பான தொழிலாளர்கள், தீபக்கிடம் போய்க்கேட்க, இன்னைக்கு க்ளியராயிரும் நாளைக்கு க்ளியராயிரும் எனச் சொல்லியே இருபது நாட்களாக லோலோவென அலையவிடுகிறாராம்.

சிம்ரனைப் பார்க்கலாம் என்றால் அதுவும் முடியவில்லை. காரணம், சிவகார்த்திகேயன்- பொன் ராம் கூட்டணியில் உருவாகும் "சீமராஜா'-வில் வில்லி வேஷம் போடும் சிம்ரன், அந்தப் பட ஷூட்டிங்கிலும் கௌதம்வாசுதேவ் மேனன் பட ஷூட்டிங்கிலும் செம பிஸி என்கிறாராம் தீபக்.

simran with husband

""மத்த கம்பெனி படங்களில் நடிக்கும்போது மட்டும் சம்பளத்தைக் கரெக்டாப் பேசி முன்னக்கூட்டியே கச்சிதமா வாங்கிடும் சிம்ரன், கேரவன் வேன் இல்லேன்னா ஷூட்டிங்கிற்கே வராமல் தயாரிப்பாளர்களையும் டைரக்டர்களையும் டென்ஷனாக்குவார். ஆனா அவரின் சொந்தக் கம்பெனியில் நாங்க நொந்து நொம்பலமாகிக் கிடக்கிறோம்'' என கண்ணீருடன் புலம்புகிறார்கள் சினிமா தொழிலாளர்கள்.

படம் பேரு "பத்ரகாளி'-ல்ல அதான் பாடாய்ப்படுத்துறாரு சிம்ரன்.

இதையும் படியுங்கள்
Subscribe