எஸ்.என்.எஸ். மூவீஸ் சார்பில் கௌசல்யா ராணி அதிக பொருட் செலவில் தயாரிக்கும் "தமிழரசன்' படத்தில் விஜய் ஆண்டனி, ரம்யா நம்பீசன், சுரேஷ்கோபி, ராதாரவி, சோனு சூட், யோகி பாபு, சங்கீதா கஸ்தூரி, ரோபோ சங்கர், கஸ்தூரி சாயாசிங் மதுமிதா, ஒய்.ஜி.மகேந்திரன், கதிர், ஸ்ரீலேகா, ஸ்ரீஜா, கே.ஆர்.செல்வராஜ், சென்ட்ராயன், "கும்கி' அஸ்வின், மேஜர் கவுதம், சுவாமிநாதன், முனீஸ்காந்த், ராஜ் கிருஷ்ணா, ராஜேந் திரன் ஆகியோருடன் இயக்குநர் மோகன் ராஜாவின் மகன் மாஸ்டர் பிரணவ் நடிக்கிறார்.
ஒளிப்பதிவு- ஆர்.டி. ராஜசேகர், இசை- இளையராஜா, பாடல்கள்- பழனிபாரதி, ஜெய்ராம், கலை- மிலன், ஸ்டண்ட்- அனல் அரசு, எடிட்டிங்- புவன் சந்திரசேகர், நடனம்- பிருந்தா சதீஷ், தயாரிப்பு மேற் பார்வை- ராஜா ஸ்ரீதர், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்- பாபு யோகேஸ்வரன். ""ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரியாக இருக்கும் விஜய் ஆண்டனி சூழ்நிலை காரண மாக ஒரு போராளி யாக மாறுவதுதான் இந்தப் படத்தின் திரைக்கதை.
இசைஞானி இளையராஜாவின் இசை படத்திற்கு மிகப்பெரிய பலம். இந்தப் படத்திற்காக எஸ்.பி.பி. ஒரு பாடலையும், 12 வருடங்களுக்குப் பிறகு இளையரா ஜாவின் இசையில் கே.ஜே. யேசுதாஸ் ஒரு பாடலையும் பாடியிருக்கிறார்கள். அந்தப் பாடல்கள் 2020-ஆம் ஆண்டின் சூப்பர் ஹிட் பாடல்களாக வலம்வரும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.
இந்த மாதம் ரிலீசாகிறான் தமிழரசன்'' என்கிறார் பாபு யோகேஸ்வரன்.