Advertisment

தமிழ் சினிமா Vs ப்ளூ சட்டை மாறன்!

/idhalgal/cinikkuttu/tamil-cinema-vs-blue-short-maran

பிரபுதேவா நடிப்பில் சமீபத்தில் ரிலீசான "சார்லி சாப்ளின்- 2 படத்தை ப்ளூ சட்டை மாறன் என்பவர். தனது தமிழ் டாக்கீஸ் யூ டியூப் சேனலில் கடுமையாக விமர்சனம் செய்த விவகாரம், அந்தப் படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநரால் காவல்துறையில் புகார் செய்யப்படும் அளவுக்கு சீரியஸாகிவிட்டது. ஏற்கெனவே ராகவா லாரன்ஸ் நடித்த "மொட்ட சிவா கெட்ட சிவா' படம் வெளிவந்த போது, அந்தப் படத்தை தரக் குறைவாக விமர்சித்ததாக ‘ப்ளூ சட்டை’ மாறனை பல மேடை களில் கண்டித்துப் பேசினார் அந்தப் படத்தின் இயக்குநர் சாய் ரமணி. அஜித்தின் "விவேகம்' படம் வெளியான போது படத்தைத் தாண்டி அஜித்தை விமர்சித்தார் மாறன். அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளங் களில் இவரை கடுமையாக சாடி வந்தனர், நேரிலும் த

பிரபுதேவா நடிப்பில் சமீபத்தில் ரிலீசான "சார்லி சாப்ளின்- 2 படத்தை ப்ளூ சட்டை மாறன் என்பவர். தனது தமிழ் டாக்கீஸ் யூ டியூப் சேனலில் கடுமையாக விமர்சனம் செய்த விவகாரம், அந்தப் படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநரால் காவல்துறையில் புகார் செய்யப்படும் அளவுக்கு சீரியஸாகிவிட்டது. ஏற்கெனவே ராகவா லாரன்ஸ் நடித்த "மொட்ட சிவா கெட்ட சிவா' படம் வெளிவந்த போது, அந்தப் படத்தை தரக் குறைவாக விமர்சித்ததாக ‘ப்ளூ சட்டை’ மாறனை பல மேடை களில் கண்டித்துப் பேசினார் அந்தப் படத்தின் இயக்குநர் சாய் ரமணி. அஜித்தின் "விவேகம்' படம் வெளியான போது படத்தைத் தாண்டி அஜித்தை விமர்சித்தார் மாறன். அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளங் களில் இவரை கடுமையாக சாடி வந்தனர், நேரிலும் தேடி வந்தனர். இந்த விஷயத்தில் மாறனைக் கண்டித்து இயக்குநர் விஜய் மில்டன், "ஈட்டி' இயக்குநர் ரவி அரசு உள்ளிட்ட சிலர் வீடியோ வெளியிட்டனர். கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் விஜய் ஆன்டனி நடித்த "காளி' படத்தை இவர் விமர்சித்த விதம் குறித்து கோபம்கொண்ட கிருத்திகா, மாறனின் ரிவ்யூவைதான் ரிவ்யூ செய்து ஒரு வீடியோவை மாறனின் தமிழ் டாக்கீஸ் யூ டியூப் சேனல் வாயிலாகவே வெளி யிட்டார். இப்படி அவ்வப்போது நடக் கும் பிரச்சினை இப்போது போலீஸ் வரை சென்றுள்ளது. இந்த எதிர்மறை பிரபலம் மாறனுக்கு சாதகமாகவும் ஆகிறது. இன்றளவிலும் "விவேகம்' விமர்சனம் அவரது சேனல் டாப் லிஸ்ட்டில் தொடர்கிறது.

Advertisment

tamilcinema

"சார்லி சாப்ளின்- 2' குறித்து, யூ டியூப்பில் காணப்படும் ப்ளூ சட்டை மாறனின் விமர்சனத்தில் ஒரு பகுதி இது-

""படத்துல கோபம் வர்றமாதிரி காமெடி பண்ணி வச்சிருக்கானுங்க. இந்தப் படத்தை எடுத்தவங்க அரையும் குறையுமா அப்டேட் ஆயிருக்காங்க. ரெண்டுங்கெட்டானா அப்டேடாகி உசிர எடுக்கிறாங்க. ஒன்றரை மணி நேரம் வாட்ஸப் மெசேஜை அழிக்கிறத பத்தியே பேசிக்கிட்டிருக்காங்க. ஆனா.

Advertisment

இப்ப ஒரு ஆப்ஷன் வந்திருச்சு. டெலிட் ஃபார் எவரி ஒன்ங்கிற ஆப் ஷன்ல, தவறா அனுப்பிய மெசேஜை அழிச்சிட முடியும். tamilcinemaஅதைவிட்டுட்டு, ஹீரோயின் போன்ல இருக்கிற மெசேஜை அழிக்கிறதையே ஒன்றரை மணி நேரம் படமா எடுத்து வச்சிருக் காங்க. இந்த மாதிரி விஷய மெல்லாம் வந்த பிறகு, இப்படி ஒரு படம் எடுத்து ஒன்றரை மணி நேரம் வறுத்து எடுத்துட்டாங்க’’ பிரபுதேவா கதையெல்லாம் கேட்கிறாரா? இல்லையான்னு தெரியல. இஷ்டத் துக்கு நடிக்கிறாரு.

இந்தப் படத்துல ஒரு பாட்டு ஹிட் ஆயிருச்சு. அந்தப் பாட்டுக்காக இந்தப் படத்தை ஒருவாட்டி பார்க்கலாம்னு ஒரு கோஷ்டி சொல்லிக்கிட்டுத் திரியுது. "பொல்லாதவன்' படத்துல சந்தானம் சொல்வாப்ல- சிங்கிள் டீக்கு ஆசைப் பட்டு உசிர விட்றாதன்னு.' அதைத் தான் நாங்களும் சொல்லுறோம்'' என்று வார்த்தைகளால் "சார்லி சாப்ளின்-2'-வை வறுத்தெடுக்கிறார் மாறன்.

சென்னை போலீஸ் கமிஷனரி டம் தயாரிப்பாளர் டி. சிவா அளித்திருக்கும் புகாரில் "படத்தை யூ டியூப்பில் விமர்சனம் செய்வதற்கும், அதில் விளம்பரம் செய்வதற்கும் பெருந் தொகை கேட்டார் மாறன். நாங்கள் விளம்பரமோ, பணமோ தரமாட்டோம் என்று மறுத்துவிட்டோம். அதனால், விமர்சனம் என்ற பெயரில், தரக்குறைவான வகையிலும், ஒருமையிலும் பேசியிருக்கிறார் ப்ளூ சட்டை மாறன். மேலும், அவர் கொலை மிரட்ட லும் விடுத்தார்' என்கிறரீதியில் குறிப் பிட்டுள்ளனர். ப்ளூ சட்டை மாறனோ, ""நான் யாரையும் மிரட்டவும் இல்லை; பணம் கேட்கவும் இல்லை'' என்று மறுக்கிறார். ஒரு பக்கம் எதிர்ப்புகள் இருந்தாலும், இன்னொரு புறம் அவர் சேனல்மூலம் திரைப்படங்களை விளம்பரம் செய்யும் தயாரிப்பாளர் களும் இருக்கிறார்கள்.

நல்ல இயக்குநர்; நல்ல நடிகர் என்று நம்பி தியேட்டருக்கு வரும் ரசிகர்களைச் சோதனைக்கு ஆளாக்கும்போது, குமுறலோ, வசைச்சொற்களோ, விமர்சனமோ வெளிப்படத்தான் செய்யும். ஆனாலும், உள்நோக்கத்துடன் விமர்சகர்கள் யாரேனும் செயல்பட்டால், நிச்சயம் அது கண்டிக்கப்பட வேண்டியதே!

cine150219
இதையும் படியுங்கள்
Subscribe