Advertisment

தமிழச்சி ஹீரோயின்ஸ் டீடெய்ல்ஸ்! 

/idhalgal/cinikkuttu/tamailacacai-haiiraoyainasa-taiitaeyalasa

த்ரிஷா

trisha

Advertisment

இவரும் சென்னைதான். மிஸ் சேலம், மிஸ் சென்னை, மிஸ் இண்டியா போட்டிகளில் கலந்து கொண்டவர். பத்திரிகை, தொலைக்காட்சி விளம்பரப் படங்களில் நடித்தவர். தொடக்கத்தில்"ஜோடி' படத்தில் சிம்ரனின்தோழியாக வந்தார். பிறகு,"லேசா லேசா' என்ற படத்தில் ஒப்பந்தமானார். அதற்கடுத்து"எனக்கு 20 உனக்கு 18' படத்திலும் ஒப்பந்தமானார். இந்த இரண்டு படங்களும் வருவதற்கு முன்னரே"மவுனம் பேசியதே' படம் வந்து விட்டது.

அந்தப் படத்தின் சுமாரான வெற்றியைத் தொடர்ந்து விமர்சனங்களும் நன்றாக வந்தன.

"மனசெல்லாம்' படத்துக்கு அடுத்தபடியாக விக்ரமுடன் "சாமி' படத்தில் ஹிட் ஆனார். அப்புறம் அப்படியேபெரிய ஹீரோக்களுடன் ஜோடிபோட்டார். ஹீரோக்களுக்குப் பிடித்த நடிகையாக மாற்றிக் கொண்டதால் மார்க்கெட் உயர்ந்தது.

Advertisment

இப்போது அவர் தனது சினிமாவாழ்க்கையின் அதாவது கதாநாயகிவாய்ப்புகளின் கடைசிக் கட்டத்தில்இருக்கிறார். கல்யாணம் செய்து கொண்டு பிறகு சில காலம் கழித்துவில்லி−யாகவோ, துணைக் கேரக்டர்களிலோ வரலாம். பார்க்கலாம்.

தமிழ் நடிகையாக இருந்தாலும், இவர் சொந்தக் குரலி−ல் வசனம் பேசியது "கொடி' படத்தில்தான். ஆர். மாதேஷின் "மோகினி ஆட்டம்' த்ரிஷாவுக்கு செம பேயாட்டமாம்

ஸ்ருதி

sruthihassan

கமல்ஹாஸனின் மகள்கள் ரெண்டுபேரும் சினிமாவில் நடிக்க வருவாங்களான்னு ஒருமுறை கமல்கிட்டயே கேட்டாங்க.

"அது அவங்களோட முடிவு' என்று கமல் சொன்னார். ஸ்ருதி இசைத்துறைக்கும், அக்ஷரா தொழில்நுட்பத்துறைக்கும் போவாங்கன்னுதான் எல்லாரும் நெனச்சிருந்தாங்க.

அதுக்கேத்த மாதிரி ஸ்ருதி மியூசிக், பாட்டுன்னு இன்

த்ரிஷா

trisha

Advertisment

இவரும் சென்னைதான். மிஸ் சேலம், மிஸ் சென்னை, மிஸ் இண்டியா போட்டிகளில் கலந்து கொண்டவர். பத்திரிகை, தொலைக்காட்சி விளம்பரப் படங்களில் நடித்தவர். தொடக்கத்தில்"ஜோடி' படத்தில் சிம்ரனின்தோழியாக வந்தார். பிறகு,"லேசா லேசா' என்ற படத்தில் ஒப்பந்தமானார். அதற்கடுத்து"எனக்கு 20 உனக்கு 18' படத்திலும் ஒப்பந்தமானார். இந்த இரண்டு படங்களும் வருவதற்கு முன்னரே"மவுனம் பேசியதே' படம் வந்து விட்டது.

அந்தப் படத்தின் சுமாரான வெற்றியைத் தொடர்ந்து விமர்சனங்களும் நன்றாக வந்தன.

"மனசெல்லாம்' படத்துக்கு அடுத்தபடியாக விக்ரமுடன் "சாமி' படத்தில் ஹிட் ஆனார். அப்புறம் அப்படியேபெரிய ஹீரோக்களுடன் ஜோடிபோட்டார். ஹீரோக்களுக்குப் பிடித்த நடிகையாக மாற்றிக் கொண்டதால் மார்க்கெட் உயர்ந்தது.

Advertisment

இப்போது அவர் தனது சினிமாவாழ்க்கையின் அதாவது கதாநாயகிவாய்ப்புகளின் கடைசிக் கட்டத்தில்இருக்கிறார். கல்யாணம் செய்து கொண்டு பிறகு சில காலம் கழித்துவில்லி−யாகவோ, துணைக் கேரக்டர்களிலோ வரலாம். பார்க்கலாம்.

தமிழ் நடிகையாக இருந்தாலும், இவர் சொந்தக் குரலி−ல் வசனம் பேசியது "கொடி' படத்தில்தான். ஆர். மாதேஷின் "மோகினி ஆட்டம்' த்ரிஷாவுக்கு செம பேயாட்டமாம்

ஸ்ருதி

sruthihassan

கமல்ஹாஸனின் மகள்கள் ரெண்டுபேரும் சினிமாவில் நடிக்க வருவாங்களான்னு ஒருமுறை கமல்கிட்டயே கேட்டாங்க.

"அது அவங்களோட முடிவு' என்று கமல் சொன்னார். ஸ்ருதி இசைத்துறைக்கும், அக்ஷரா தொழில்நுட்பத்துறைக்கும் போவாங்கன்னுதான் எல்லாரும் நெனச்சிருந்தாங்க.

அதுக்கேத்த மாதிரி ஸ்ருதி மியூசிக், பாட்டுன்னு இன்டெரஸ்ட் காட்டிக்கிட்டு இருந்தாங்க. அவுங்க அப்பா கமல் "ஹேராம்' சினிமா எடுத்தப்போ கூடமாட ஒத்தாசை செஞ்சிக்கிட்டு இருந்தாங்க.

திடீர்னு ஒருநாள், ஷூட்டிங்கில் காந்தியைப் பார்க்க படேல் வர்றமாதிரி காட்சி எடுத்தாங்க. அப்போ படேலுடன் அவருடைய மகளும் வர்றமாதிரி காட்சி அமைக்கவேண்டியதா போச்சு.

அப்போதான், ஸ்ருதியை படேல் மகளா சில வினாடி காட்சியில் நடிக்கவச்சார் கமல்.

அதுக்கு அப்புறம் தமிழில் ஸ்ருதி நடிப்பார் என்று தகவல்கள் கசிந்தன. வெங்கட் பிரபு டைரக்ட் செய்த "சரோஜா' படத்தில் நடிப்பார் என்றார்கள். ஆனால், அதைத் தவிர்த்துவிட்டார். பிறகு மாதவனுடன் "என்றென்றும் புன்னகை' என்ற படத்தில் நடிப்பார் என்று கூறப்பட்டது. ஒப்பந்தமும் ஆனார். ஆனால், அந்தப் படம் தொடக்க நிலையிலேயே நின்றுபோனது.

இந்த நிலையில்தான், 2008-ல் "லக்' என்ற இந்திப் படத்தில் நடித்தார். ஆனால், அந்தப் படம் சரியாக போகவில்லை. ஸ்ருதிக்குநடிப்பு வரவில்லை என்றார்கள். வசன உச்சரிப்பு சரியில்லை என்றார்கள். இதையடுத்து கமல் நடித்த "உன்னைப்போல் ஒருவன்', "ஈநாடு'ஆகிய படங்களுக்கு இசையமைக்கும் பொறுப்பை ஏற்றார்.

2011-ல் சித்தார்த்துடன் நடித்த தெலுங்குப் படமும் இவருக்கு கைகொடுக்கவில்லை. ஆனால், ஸ்ருதியைப் பற்றிய நல்ல விமர்சனங்கள் கிடைத்தன. அப்புறம்தான் சில இந்திப் படங்களிலும், முருகதாஸின் "ஏழாம் அறிவு' திரைப்படமும் வெளியாகி அவருக்கு நல்ல அங்கீகாரத்தைக் கொடுத்தன.

தமிழில் தனுஷுடன் நடித்த "3', விஷாலுடன் நடித்த "பூஜை',விஜயுடன் நடித்த "லி'லி, அஜித்துடன் நடித்த "வேதாளம்' ஆகிய படங்களைத் தவிர பல இந்தி மற்றும் தெலுங்குப் படங்களிலும் நடித்தார்.

ஸ்ருதியைச் சுற்றி பல்வேறு சர்ச்சைகளும் உலாவந்தன.

அவருடைய வெளிப்படையான பேச்சுக்கள் சிலசமயம் செய்திகள் ஆகின. திரைப்பட விழாக்களுக்குஅவர் அணிந்துவந்த உடைகள் கிசுகிசுக்களாகின. இருந்தாலும் எதைப்பற்றியும் கவலைப்படாத ஸ்ருதி திரையுலகில் குறிப்பிடத்தகுந்த இடத்தைப் பிடித்துவிட்டார் என்றே கூறவேண்டும்.

இதோ, விரைவில் லண்டன் காதலரைக் கைப்பிடிக்கப் போகிறார்என்கிறார்கள். தாய்மொழி இந்திஆனாலும், தந்தைமொழி அழகிய தமிழ் என்பதால் பரமக்குடி பச்சை தமிழச்சியை வாழ்க வளமுடன் என்று வாழ்த்துவோம்.

அக்ஷரா ஹாஸன்

kamal

கமல்ஹாஸனின் இளைய மகள்அக்ஷரா ஹாஸன் சினிமா இயக்குநராகத்தான் தீவிர முயற்சியில் ஈடுபட்டிருந்தார். தந்தையுடன் இணைந்து பணியாற்றிவந்தார். ஆனால், அவரும் திடீரென இந்தியில் தனுஷ் நடித்த "ஷமிதாப்' என்ற படத்தில் நடிகையாக அறிமுகமானார்.

இருந்தாலும், அந்தப் படத்தில்கூட தனுஷுக்கு சினிமா வாய்ப்பு ஏற்படுத்தித் தரும் துணை இயக்குனராகத்தான் அறிமுகமானார். அந்தப் படத்தோடு நடிப்புக்கு முழுக்குப் போடுவார்என்று நினைத்தால்,அடுத்து இந்தியில் தயாரான நகைச்சுவைப் படத்திலும் நடித்தார்.

சரி இவரும் நடிகையாகப் போகிறார் என்று பேச்சு அடிபடத் தொடங்கிய சமயத்தில், அஜித்தின் "விவேகம்' திரைப்படத்தில் முக்கியமான வேடத்தில் அறிமுகமானார். அடுத்து கமல் தயாரிப்பில் ஒரு படத்திலும் நடிக்கப் போகிறார்.

தற்போதைக்கு கமல்ஹாஸனின் "சபாஷ் நாயுடு' படத்தின் உதவி இயக்குனராகப் பணியாற்றிவருகிறார்.

தமிழ் பேசும் நல்ல நடிகையோ, நல்ல இயக்குனரோ நமக்கு கிடைத்தால் நல்லதுதானே.

தான்யா ரவிச்சந்திரன்

daniya-ravichandran

அந்தக்கால ஸ்டைல் மன்னன் ரவிச்சந்திரனின் பேத்தி தான்யா ரவிச்சந்திரன் சினிமாவில் நல்ல தமிழ் பேசி நடிக்க வந்திருக்கிறார்.

சசிக்குமாரின் "பலே வெள்ளையத்தேவா' படத்தில் அறிமுகமாகி, அருள்நிதியுடன் "பிருந்தாவனம்', விஜய் சேதுபதியுடன் "கருப்பன்' என்று நல்ல படங்களைக் கொடுத்திருக்கிறார். இந்தப் படங்களில்அவருடைய நடிப்பும் பேசும்படியாக இருந்தது.

ஆனால், அவருக்கான பட வாய்ப்புகள்தான் சொல்லிலிக்கொள்ளும்படியாக இல்லையாம்...

இருந்துட்டுப் போகட்டும். சரவணா ஸ்டோர் விளம்பரத்துல ஸ்நேகாவுடன் சேர்ந்துவந்து "செம' பியூட்டியா இருக்காரே!

ப்ரியா ஆனந்த்

priya-anand

சென்னையில் தமிழ்அம்மாவுக்கும் பாதி தெலுங்கு பாதி மராத்தி அப்பாவுக்கும் பிறந்தாலும், சென்னையில்பிறந்து தமிழ் நன்றாக அறிந்தவர் என்பதால் ப்ரியா ஆனந்தையும் தமிழச்சியாகவே பார்க்கலாம்.

2009- ல் இவருக்கு புக் ஆன முதல் படம் புகைப்படம்.

ஆனால், அது வெளிவருவதற்குள் வெளியான படம் வாமனன்.

ப்ரியா ஆனந்த்துக்கு தமிழ்,தெலுங்கு, ஆங்கிலம், பெங்காலிலி, ஹிந்தி, மராத்தி ஆகிய மொழிகள் தெரியும்.

அமெரிக்காவில் கம்யூனிகே ஷன், ஜர்னலிலிஸம் படித்தவர். சினிமாவில் டெக்னிகலாக கற்க ஆசைப்பட்டு நடிகையானார்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என்று பல்வேறு மொழிகளிலும் நடிக்கும் இவர், தனக்கென்று ஒரு அடையாளத்தை தக்க வைத்திருக்கிறார். தொடர்ந்து இவருக்கு குறைந்தபட்ச வாய்ப்புகள் காத்திருக்கும் வகையில் நல்ல பெயரையும் சம்பாதித்திருக்கிறார்.

சாந்தினி தமிழரசன்

chandini

சென்னை நுங்கம்பாக்கத்தில்பொறந்த பொண்ணு. அப்பா பேருதமிழரசன் என்பதிலிலிருந்தே பொண்ணை புரிந்துகொள்ளலாம். எத்திராஜ் காலேஜில் விஷுவல் கம்யூனிகேஷன் படித்திருக்கிறார். மிஸ் சென்னை போட்டியில் பங்கேற்றவர். பாக்கியராஜின் சித்து பிளஸ் டூ படத்தில்அவருடைய மகன் சாந்தனுவுக்கு ஜோடியாக அறிமுகம் செய்யப்பட்டார்.

அப்புறம் நான் ராஜாவாகப் போகிறேன் படத்தில் நடித்தார். பிறகு ஒரு ஆண்டு முழுக்க தெலுங்குப் படங்களில் நடித்தார். மீண்டும் தமிழுக்கு வந்தார். இப்போது 2018 ஆம் ஆண்டு முழுக்க அவரிடம் படம் கைவசம் இருக்கிறது.

மன்னர் வகையறா தொடங்கி, வணங்காமுடி வரை 9 படங்கள் அவரிடம் இருக்கின்றன. மேலும் வாய்ப்புகள் பெற்றுவளமோடு வாழ்க சாந்தினி!

சினேகா

sneha

இவருடைய அப்பாஅம்மா தெலுங்குத் தமிழர்களாக இருந்தாலும், பண்ருட்டி சொந்த ஊர் என்றாலும் இவர் மும்பையில்பிறந்தவர். குடும்பத்தில் கடைக்குட்டி.

இவர் பிறந்தவுடன் குடும்பத்தினர்ஐக்கிய அரபு அமீரகத்திற்கு குடிபெயர்ந்தனர்.

பின்னர் தமிழகம் திரும்பி கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் குடியேறினர். சினிமா வாய்ப்புகளுக்காக முயற்சி செய்தபோதுமுதலி−ல் இவருக்கு கிடைத்த வாய்ப்பு மலையாளத் திரைப்படமான இங்கனே ஒரு நீல பாஷி.

அதன்பிறகுதான் தமிழில் தொடர்ச்சியான வாய்ப்புகள் கிடைத்தன. சினிமாவில் இவருக்கென்று தனிப் புகழ் கிடைத்தாலும், பிரச்சனைகளும் இவரை விட்டுவைக்கவில்லை. எல்லாவற்றையும் கடந்த இவர், நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்துகொண்டு பெண் குழந்தைக்கும் தாயாகிவிட்டார்.

சரவணா ஸ்டோர்ஸ் கடைகளில் ஒரு கடைக்கு நிரந்தர விளம்பர மாடலாக இப்போதும் நீடிக்கிறார்.

இதையும் படியுங்கள்
Subscribe