நயன்தாரா நடிக்கும் "கொலையுதிர் காலம்' படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் பல சினிமா பிரபலங்கள் கலந்துகொண்டனர், படத்தின் ஹீரோயினான நயனைத் தவிர, விழாவில் பல பிரபலங்கள் பேசினாலும், ரொம்பவே பிரபலமான ராதாரவி பேசியதுதான் பிரச்சினையானது அல்லது பிரச்சினையாக்கப்பட்டது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/nayanthara_12.jpg)
பொதுவாகவே, தான் நடிக்கும் படங்களின் புரமோ ஃபங்ஷனுக்கு வராமல் திமிர்த்தனமாக நடந்துகொள்வதுதான் நயனின் பழக்கம். சில லகரங்கள் கைமாறியதால், ஒன்றிரண்டு தெலுங்குப் பட புரமோக்களுக்குப் போயுள்ளார். இந்த வரிசையில் தான் "கொலையுதிர் காலம்' படத் தின் புரமோஷனுக்கு வரவில்லை நயன். தனது பேச்சின் ஆரம்பத் தில் இதுபற்றிய கடுமையாகப் பேசிய ராதாரவி, போகப்போக தனது அதிரடி ஸ்டைலில் நயனை வெளுத்து வாங்கிவிட்டார். இது நாலா பக்கமும் பத்திக்கிட்டு எரிஞ்சு, ராதாரவியை தி.மு.க.விலிருந்தும் நீக்கும் நிலைக்குப் போய்விட்டது. நடிகர் சங்கம் ராதாரவியை அழைத்து விசாரிக்க வேண்டுமென காட்டமாக அறிக்கையெல்லாம் விட்டார் நயன்தாரா. பெண்ணினத்திற்கே இது அவமானம் என்ற ரேஞ்சுக்கு துள்ளிக்குதித்தார் நயன்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/radharavi_76.jpg)
அப்படிப்பட்ட நயன்தாரா இரட்டை வேடங்களில் (ரொம்ப பொருத்தம்) நடித்து கடந்த 28-ஆம் தேதி ரிலீசாகியுள்ளது "ஐரா.' இந்தப் படத்தில் அமெரிக்காவில் இருந்து வந்திருக்கும் மாப்பிள்ளை நயன்தாராவை பெண் பார்க்கும் சீனில், ""இப்ப கல்யாணம் பண்ணிக்குவோம். ரெண்டு மூணு வருஷம் கழிச்சு பிரிஞ்சுருவோம்'' என்பார். அதற்கு நயன்தாரா ""ஒனக்கு ஆதின்னு பேரு வச்சதுக்குப் பதிலா...'' அப்படின்னு சொல்லிட்டு நிப்பாட்டுவார்.
அதுக்கு மாப்பிள்ளை, ""நீதான் பெரிய பிரஸ் ரிப்போர்ட்டர் ஆச்சே. இந்த பொசிஷனுக்கு வர்றதுக்காக நாலஞ்சு ஆம்பளைகள பார்த்திருக்க மாட்டே'' என எகத்தாளமாகப் பேசியதும் சைலண்டாகி விடுவார் நயன். இப்படித்தான் மீடியாவில் வேலை பார்க்கும் பெண்களை அருவெறுப்பாகப் பேசினார் பா.ஜ.க.வைச் சேர்ந்த காமெடி பீஸ் எஸ்.வி. சேகர்.
அப்போது துள்ளிக் குதித்தவர்களெல்லாம் நயன் படத்தின் இந்த டயலாக்கிற்கு என்ன செய்யப் போகிறார்கள்? எந்தப் படத்திற்குமே ஒத்துழைக்காத நயன்தாராமீது நடிகர் சங்கம் என்ன நடவடிக்கை எடுக்கப் போகுது?
அட போங்கப்பு! நடிகைமீது நடவடிக்கையாவது ... மண்ணாங்கட்டியாவது... ஏதாவது ஒரு நடிகர்மீது ஆக் ஷன்னா, படு ஸ்பீடாகப் பாய் வார்கள் நடிகர் சங்கப் புலிகள்.
முக்கியத்தகவல்: "ஐரா'-வில் பவானியாக வரும் கருப்பு நயன்தாராவை காதலித்து திருமணமும் செய்யும் முடிவுக்கு வருகிறார் கலையரசன். ஆனால் ஒரு சீனில்கூட கலையரசனின் நகம்கூட "டச்' பண்ணாத அளவுக்கு கவனமாக இருந் திருக்கிறார் டைரக்டர் சர்ஜுன். என்ன ஒரு வில்லத்தனம்!
-ஈ.பா. பரமேஷ்
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2019-03/nayanthara-t.jpg)