ஆலயா கிரியேஷன்ஸ் சார்பில் அன்பரசன் தயாரிக்கும் படம் முன்பதிவு.' இப்படத்தை ஜி.எம். துரைபாண்டியன் இயக்குகிறார். இவர் பல குறும்படங்கள், விளம்பரப் படங்களை இயக்கியவர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ilayaraja_4.jpg)
கதை, திரைக்கதை சார்ந்து அவர் நண்பர்கள்மூலம் மலையாளப் பக்கம் போய் பல படங்களில் பணியாற்றியிருக்கிறார். சென்ற ஆண்டு "திரைக்கு வராத கதை' என்ற படம் தமிழில் வந்தது. அது மலையாளத்தில் "கேர்ள்ஸ்' என்ற பெயரில் வெளியானது. அதில் கதை, வசனம் எழுதியிருக்கிறார்.
""இன்று இளைஞர்களைப் படுகுழியில் தள்ளிவிடும் ஒரு பிரச்சினை பாலினக் கவர்ச்சி என்கிற பிரச்சினைதான். பால்யப் பருவத்தில் அறியாத வயதில் புரியாத மனதில் எழும் பாலினக் கவர்ச்சியை காதல் என்று தவறாகப்புரிந்துகொண்டு தங்கள் எதிர்காலத்தையும், நண்பர்கள், பெற்றோர் களுக்கு இடையேயான உறவுகளையும் கெடுத்துக் கொள்கிறார்கள். அப்படி பாதிக்கப்பட்ட ஒரு இளைஞனின் கதைதான் "முன்பதிவு.' இந்தக் கதை யைக் கேட்டதும் இசைஞானி இளையராஜாவுக்குப் பிடித்துவிட்டது. கதையைக் கேட்டவர் ஒரு நிபந்தனை விதித்தார். சொன்ன கதையை அப்படியே சொன்னபடி படமாக எடுக்கவேண்டும் எனச் சொல்லிவிட்டு ஒரு பாடலை யும் ரெக்கார்டிங் பண்ணிக் கொடுத்து விட்டார்.
இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குநர் கௌதமனின் மகன் தமிழ் நடிக்கிறார். கூத்துப் பட்டறைக் கலைஞர்களும் பங்கேற்கிறார்கள். விரைவில் ஷூட்டிங் ஆரம்பம்'' என்கிறார் துரைப் பாண்டியன்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2019-07/ilayaraja-t.jpg)