நிம்ரத் கவுருக்கு 10 வயதில் அது நடந்தது.

ராணுவ அதிகாரியான தந்தை காஷ்மீர் தீவிரவாதி களால் கடத்தப்பட்டு கொல்லப்பட்டார். அவர் கொல்லப்படும்வரை ராணுவக் குடியிருப்புகளிலேயே வாழ்ந்தவர் நிம்ரத் கவுர்.

Advertisment

neemrath

அவருக்கு ராணுவ அதிகாரி வேடம் கிடைத்தால் எப்படி இருக்கும்?

1982-ல் பிறந்த நிம்ரத் 2004-ல் இந்தி சினிமாவில் அவ்வப்போது தலைகாட்டும் ரோல்களில் நடிக்கத் தொடங்கினார். 2012-ல்தான் அவருக்கு இந்தி சினிமாவில் சொல்லிலிக்கொள்ளும்படியான கேரக்டர்கள் கிடைக்கத் தொடங்கின.

2012-ல் அவர் துணைப் பாத்திரத்தில் நடித்த "பெட்லெர்ஸ்' என்ற திரைப்படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. அதே ஆண்டு அவர் துணைக் கேரக்டரில் நடித்த ஒரு படம் வந்து போனது.

ஆனால், 2013-ல் அவர் இர்ஃபான்கானுடன் கதாநாயகியாக நடித்த "தி லஞ்ச் பாக்ஸ்' என்ற படம் அவருக்கு தனித்த அடையாளத்தை கொடுத்தது.

நிம்ரத் கவுர் தனக்குள் ஒரு லட்சியத்தை புதைத்து வைத்திருந்தார். அந்த லட்சியத்தை நிறைவேற்றும் காலத்துக்காக காத்திருந்திருக்கிறார்.

பாலிலிவுட் சினிமாவில் நடிப்பதற்கு முன்னரே, தனது படிப்புக்கு ஊடாக, பத்திரிகை விளம்பரங்களுக்கு போஸ் கொடுத்திருக்கிறார்.

அப்படித்தான் சினிமாவுக்குள் அடியெடுத்து வைத்தார். பாலிலிவுட் படத்தில் நடித்தாலும் குறும்படம், தொலைக்காட்சித் தொடர், இணையதளத் தொடர்கள் என்று தனது தளத்தை விரிவுபடுத்திக் கொண்டே இருந்திருக்கிறார்.

dedication

Advertisment

""நான் ரசிகையாக இருந்தால் எனக்கு எது பிடிக்குமோ அதைத் தான் நான் நடிப்பேன். எனக்கே பிடிக்காத எதையும் நான் செய்ய மாட்டேன். நான் பேட்டி கொடுக்கும் அறை எனக் குப் பிடிக்கும் வகையில் அமைதியாக இல்லா விட் டால் நான் பேட்டி கொடுக்க மாட்டேன்.

அந்த வகையில்தான் ராணுவத்தைப் பின்னணியாகக்கொண்ட ஒரு கதைக்களம் எனக்கு அமைந்தது. அது இணையதளத் தொடர்தான். ஆனால், எனக்குத் திரைப்படமோ, தொலைக்காட்சித் தொடரோ, நாடகமோ, இணையதளத் தொடரோ எதுவாக இருந்தா லும் எனக்கு ஒன்றுதான். திரைப்படத்தில் எவ்வளவு ரிஸ்க் எடுக்கிறேனோ அதே அளவு ரிஸ்க்கை இணையதளத் தொடருக்கும் எடுப்பேன்'' என்கிறார் நிம்ரத் கவுர். தனது தந்தையுடன் ராணுவக் குடியிருப்பில் வசித்து ராணுவ சூழ்நிலையை உணர்ந்த நிம்ரத், இப்போது, ராணுவப் பின்னணி கொண்ட "தி டெஸ்ட் கேஸ்' என்ற இணையதளத் தொடரில் கமாண்டோவாக நடிக்கிறார்.

""சினிமாவோ, தொலைக் காட்சித் தொடரோ, இணையதளத் தொடரோ, மீடியா எதுவானாலும், அர்ப்பணிப்புடன்தான் நடிப்பேன்'' என்கிறார் நிம்ரத்.