/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/tamana.jpg)
தமன்னாவின் கைவசம் உதயநிதியுடன் இப்போது நடித்துக் கொண்டிருக்கும் "கண்ணே கலைமானே' படம் உட்பட ஓரிரு படங்கள்தான் இருக்கின்றன. சீனு ராமசாமி டைரக்ஷனில் வளரும் இப்படத்தின் படப்பிடிப்பு மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகில் உள்ள அய்யூர், புதுப்பட்டி, ஆ.வெள்ளாளம்பட்டி, குட்டாலம்பட்டி போன்ற இயற்கை எழில்சூழ் லொக்கேஷன்களில் நடந்துவருகிறது.
Advertisment
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/tamana1.jpg)
இடைவிடாமல் 40 நாட்கள் ஷூட்டிங் பிளானுடன் மதுரையில் டேரா போட்டுள்ளது "கண்ணே கலைமானே' டீம். கோச்சடையில் உள்ள ஹெரிடேஜ் ஓட்டலிலில் தமன்னாவுக்காக ஸ்பெஷல் ரூம் போடப்பட்டுள்ளது.
Advertisment
ஷூட்டிங் பிரேக்கில் மதுரை மீனாட்சி அம்மனை தரிசித்தார் தமன்னா. ""தாயே மீனாட்சி இந்த வருஷம் கைநிறைய படங்களும் மனசு நிறைய சந்தோஷத்தையும் வாரிவாரிக் கொடு தாயே'' என மனமுருக வேண்டினாராம் தமன்னா.
-எஸ். ஹெச்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2018-02/tamana2.jpg)