சாக்ஷி அகர்வால். இவர் அறிமுகம் தேவையில்லாத திருமுகம். "காலா' படத்தில் சிறப்பாகப் பங்காற்றிய சாக்ஷி கையில் இப்போது இருப்பது இரண்டு பெரிய படங்கள். ராய்லட்சுமி நடிப்பில் தயாராகியுள்ள "சின்ட்ரெல்லா' படத்தில் சாக்ஷி அகர்வாலுக்கு முக்கியக் கேரக்டர். மேலும் இயக்குநர் எழில் இயக்க, ஜி.வி. பிரகாஷ் நடிக்கும் காமெடி கலந்த "ஹாரர்' படத்திலும் சாக்ஷி அகர்வால் ஒன் ஆப் த ஹீரோயின். ஏற்கெனவே இவர் மலையாளத்தில் பிஜு மேனன் ஜோடியாக நடித்த படம் இவருக்கு பெரிய அங்கீகாரமாக அமைந்துள்ளது. கூடுதல் செய்தியாக, "திருமணம் எனும் நிக்காஹ்' படத்தை இயக்கிய அணீஸ் இயக்கவிருக்கும் புதிய படத்திலும் சாக்ஷி அகர்வால்தான் ஹீரோயின்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/shakshi.jpg)
""ரஜினி சார் சினிமாவில் பெரிய அடையாளம்.
அவர் படம் மூலமாக எனக்கு ஒரு அடையாளம் வந்தது மகிழ்ச்சி. இப்போது கதையின் நாயகியாக "சின்ட் ரெல்லா' படத்தில் ராய்லட்சுமி யோடு இணைந்து நடித்தது நல்ல அனுபவம். நிச்சயம் இப்படம் என் கேரியரில் மைல்கல்லாக அமையும்.
எழில் சார் இயக்கத்தில் ஜீ.வி. பிரகாஷ் உடன் நடித்து வரும் "ஹாரர்' கலந்த காமெடி படமும் எனக்கு வேறொரு தளத்தை அமைத்துத்தரும். நான் அடிப்படை யில் தியேட்டர் ஆர்டிஸ்ட் என்பதால், எழில் சார் படத்தின் ஆடிஷனில் கேமராமேன் யூ.கே செந்தில் என்னை, ""இவர்தான் நம் படத்திற்குச் சரியாக இருப்பார்'' என்று அழுத்தமாகச் சொன்னார்.
எழில் சார் நம்மிடம் நமக்கே தெரியாமல் இருக்கும் திறமைகளை அற்புதமாக வெளிப்படுத்தச் செய்து விடுவார். அவரோடு வேலை செய்வது ஆகப்பெரும் சந்தோஷம். ஜி.வி. பிரகாஷ்போல ஒரு ஸ்வீட் மனிதரைப் பார்க்கவே முடியாது. நிச்சயம் இந்த ஆண்டு எனக்கு தமிழ் சினிமாவில் முக்கியமான ஆண்டாக இருக்கும்'' என சிலிர்ப்புடன் சொல்கிறார் சாக்ஷி அகர்வால்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2019-05/shakshi-t.jpg)