Advertisment

செம ஸ்பீட் அமலாபால்!

/idhalgal/cinikkuttu/sweat-amalapal

"திருட்டுப்பயலே-2' ஹிட்டிற்குப்பிறகு விதம்விதமான கதைகளை செலக்ட் பண்ணி நடித்துவருகிறார் அமலாபால். அவர் நடித்துக் கொண்டிருக்கும் "ஆடை' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி பரபரப்பானது.

Advertisment

அந்தப் படத்தில் சாஃப்ட்வேர் இன்ஜி

"திருட்டுப்பயலே-2' ஹிட்டிற்குப்பிறகு விதம்விதமான கதைகளை செலக்ட் பண்ணி நடித்துவருகிறார் அமலாபால். அவர் நடித்துக் கொண்டிருக்கும் "ஆடை' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி பரபரப்பானது.

Advertisment

அந்தப் படத்தில் சாஃப்ட்வேர் இன்ஜினீய ராக நடித்து வருகிறார் அமலாபால். படத்தின் ஷூட்டிங் சென்னை ஓ.எம்.ஆர். சாலையில் இருக்கும் ஐ.டி.கம்பெனிகளில் நடந்துவருகிறது.

amalapal

அதற்கடுத்ததாக அறிமுக இயக்குநர் கே.ஆர். வினோத் டைரக்ஷனில் அட்வெஞ்சர் த்ரில்லர் படமான "அதோ அந்தப் பறவை போல' படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.

Advertisment

இப்போது அபிலாஷ் பிள்ளை கதை எழுத, அனூப் பணிக்கர் டைரக்ஷனில் தடய அறுவைச் சிகிச்சை நிபுணராக பெயர் வைக்கப்படாத படம் ஒன்றில் கமிட் ஆகியிருக்கார் அமலாபால். புலனாய்வு த்ரில்லர் படமான இதில் ஒரு மர்மமான வழக்கை முடித்து வைக்க, அமலாபால் கையாளும் தனித் துவமான வழிமுறைகளைச் சுற்றித்தான் கதையின் போக்கு இருக்கிறதாம்.

""கேரள போலீஸ் டிப்பார்ட்மென்டில் டாக்டராகப் பணிபுரிந்த உமா தத்தன் கையாண்ட ஒரு வழக்கின் நிஜத்தின் அடிப்படையில் படத்தின் சம்பவங்கள் இருக்கும்'' என்கிறார் அனூப் பணிக்கர். ஏ.ஜே.பிலிம்ஸ் மற்றும் ஒயிட் ஸ்கிரீன் மீடியா இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் ஷூட்டிங் 2019-ல் கோயம்புத்தூர் மற்றும் சென்னையில் நடக்கப்போகிறது.

cine150119
இதையும் படியுங்கள்
Subscribe