கடந்த இரு இதழ்களில் விஷால், அதர்வா, விமல், ஹரீஸ் ஆகிய ஹீரோக்கள் கதை கேட்கும் லட்சணக் கதை களைப் பார்த்தோம், படித் தோம். இந்த இதழில் சூர்யா, கார்த்தி, விஜய் சேதுபதி ஆகிய மூன்று ஹீரோக்களும் கதை கேட்கும் ஸ்டைலைப் பார்க்கலாம்.
மெகா டைரக்டர்கள் என்றால் சிலசமயங்களில் சூர்யாவும் கார்த்தியும் நேரடியாக கதை கேட்பார்களாம். ஆனால், பல சமயங்களில் சூர்யாவின் ஸ்கூல் மேட்டும் இப்போது சூர்யாவின் கம்பெனியான 2-டி என்டர் டெயின்மென்டின் இணைத் தயாரிப்பாளருமான ராஜ்சேகர் கற்பூர சுந்தரபாண்டியன் தானாம்.
அந்த வரிசையில் ராஜ்சேகர், கே.வி. ஆனந்திடம் கேட்ட கதைதான் "மாற்றான்', விக்னேஷ் சிவனிடம் கேட்ட கதைதான் "தானா சேர்ந்த கூட்டம்', செல்வராகவனிடம் கேட்ட கதைதான் "என்.ஜி.கே.' இதில் "தானா சேர்ந்த கூட்டம்' ஹிட் என
கடந்த இரு இதழ்களில் விஷால், அதர்வா, விமல், ஹரீஸ் ஆகிய ஹீரோக்கள் கதை கேட்கும் லட்சணக் கதை களைப் பார்த்தோம், படித் தோம். இந்த இதழில் சூர்யா, கார்த்தி, விஜய் சேதுபதி ஆகிய மூன்று ஹீரோக்களும் கதை கேட்கும் ஸ்டைலைப் பார்க்கலாம்.
மெகா டைரக்டர்கள் என்றால் சிலசமயங்களில் சூர்யாவும் கார்த்தியும் நேரடியாக கதை கேட்பார்களாம். ஆனால், பல சமயங்களில் சூர்யாவின் ஸ்கூல் மேட்டும் இப்போது சூர்யாவின் கம்பெனியான 2-டி என்டர் டெயின்மென்டின் இணைத் தயாரிப்பாளருமான ராஜ்சேகர் கற்பூர சுந்தரபாண்டியன் தானாம்.
அந்த வரிசையில் ராஜ்சேகர், கே.வி. ஆனந்திடம் கேட்ட கதைதான் "மாற்றான்', விக்னேஷ் சிவனிடம் கேட்ட கதைதான் "தானா சேர்ந்த கூட்டம்', செல்வராகவனிடம் கேட்ட கதைதான் "என்.ஜி.கே.' இதில் "தானா சேர்ந்த கூட்டம்' ஹிட் என வெளியில் சொல்லப் பட்டாலும் படம் என்னவோ ஃப்ளாப் லிலிஸ்டில்தான் சேர்ந்தது. அதே "மாற்றா'-னும் "என்.ஜி.கே.'-வும் ஃப்ளாப் லிலிஸ்ட்டில்தான் சேர்ந்தது.
இப்போது செப்.20-ஆம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப் பட்டு, 19-ஆம் தேதி மாலை வரை ரிலீஸ் சிக்கலிலில் இருந்த "காப்பான்' படம் நிச்ச யம் தன்னைக் காக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் சூர்யா.
கார்த்திக்கு கதை கேட்ப வரும் ராஜ்சேகர்தான். இவர் கேட்ட கதைதான் கார்த்தி யுடன் ரகுல் ப்ரீத்சிங் ஜோடி போட்ட "தேவ்' படம். இந்தப் படம் ரிலீஸ் ஆனதும் தெரியவில்லை; பெட்டிக்குள் போனதும் தெரியவில்லை. இதேபோல் கார்த்தியுடன் காஜல் அகர்வால் ஜோடிபோட்டு, ராஜேஷ். எம். டைரக்ட் பண்ணிய படம் ‘"அழகு ராஜா'-வும் சுமார் ரகம்தான். கார்த்தி கொஞ்சம் உஷாராகி கேட்ட கதைதான் பாண்டி ராஜின் "கடைக்குட்டி சிங்கம்.' சமீபத்திய தமிழ் சினிமாவில், உண்மையிலேயே சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த படம் என்றால் "கடைக்குட்டி சிங்கம்'-தான்.
இப்போது கார்த்தி நடித்து, லோகேஷ் கனகராஜ் டைரக்ட் பண்ணியிருக்கும் "கைதி' படம், எஸ்.ஆர். பிரபுவின் ட்ரீம் வாரியர்ஸ் கம்பெனி தயாரிப்பு என்பதால், கார்த்தியே நேரடியாக கதை கேட்டிருக்கி றார். அதற்கு முன்பாக எஸ்.ஆர். பிரபுவும் கதையை ஆழமாகக் கேட்டபின்தான் ஷூட்டிங்கிற்கே கிளம்பி யிருக்கிறார். ராஜ்சேகர் கற்பூரசுந்தர பாண்டியனின் ஃபோனும் பெரும்பாலும் நாட் ரீச்சபிள் கண்டிஷனிலேயே இருப்பதால், நல்ல கதையுடன் இருக்கும் இணை இயக்குநர்கள் பலர் சூர்யாவிடமும் கார்த்தி யிடமும் கதை சொல்லமுடியா மல் திண்டாடி வருகிறார்கள்.
அடுத்து வருகிறார் விஜய் சேதுபதி...
கடந்த மூன்று ஆண்டுகளில் "ஜூங்கா', "கருப்பன்', "ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்', "சிந்துபாத்', "சூப்பர் டீலக்ஸ்', "சீதக்காதி', "96' என ஏழு படங்கள் விஜய் சேதுபதி நடித்து ரிலீசாகியுள்ளன. இதில் "96' மட்டுமே மெகா மெகா ஹிட் அடித்தது. மத்ததெல்லாம் நொண்டி யடித்தது.
இதில் "சிந்துபாத்'-தை ரொம்பவே நம்பினார் விஜய் சேதுபதி. அதைவிட ரொம்ப நம்பினார் அஞ்சலிலி. ஆனால் இருவ ருமே ரொம்ப ரொம்ப அப்செட்.
அடிக்கடி செல்ஃபோன் நம்பரை மாற்றினாலும், பெரிய டைரக்டர் கள், சின்ன டைரக்டர்கள் என்ற பேதமெல்லாம் விஜய் சேதுபதிக்கு கிடையாதாம்.
கதை சொல்ல வரும் புதுமுக டைரக்டர்களிடம் தன்னுடைய கால்ஷீட் டைரியை ஓப்பனாகவே காண்பித்து, ""மூணு வருஷத்துக்கு ஃபுல்லா இருக்கு. கதை கேட்கு றேன்னு ஒரு பத்து நாள், அப்புறமா பேசிக்கலாம்னு ஒரு மாதம் என உங்களை அலையவிடுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. உங்களுக்கும் பிரயோஜனமில்லை.
அதனால நீங்க வேற ஹீரோவை டிரைபண்ணிப்பாருங்க. ஆல் தி பெஸ்ட் பாஸ்''’’ என சிரித்த முகத்துடன் அனுப்பி வைப்பதுதான் விஜய் சேதுபதியின் ஸ்டைலாம்.
ராஷி கண்ணா, நிவேதா பெத்துராஜ் என இரு ஹீரோயின்களுடன் விஜய் சேதுபதி ஜோடிபோட்டிருக்கும் "சங்கத் தமிழன்' படத்தின் டிரைலர் கடந்த வாரம் ரிலீஸ் ஆகியுள்ளது. அடுத்த தாக எஸ்.பி. ஜனநாதன் டைரக்ஷனில் "லாபம்' ஷூட்டிங் முடிவடைந்திருக்கிறது.
இதற்கடுத்து "விருமாண்டி' டைரக்ஷ னில் விஜய் சேதுபதி- ஐஸ்வர்யா ராஜேஷ் காம்பினேஷனில் "க/பெ ரணசிங்கம்', டெல்லிபிரசாத் என்ற புதுமுக டைரக்டரின் அதிதிராவ் ஹைதாரி யுடன் ஜோடிபோடும் "துக்ளக் தர்பார்' என செம பிஸியாக இருக்கிறார் விஜய் சேதுபதி.
-ஈ.பா.பரமேஷ்