மாறுபட்ட கதா பாத்திரங்கள்மீது நாட்டம் கொண்டு, வித்தியாசமான படங்களாகத் தேடி நடித்து, தனக்கென தனிச்சிறப் பான இடத்தைப் பிடித் துள்ளார் ரெஜினா கஸண்ட்ரா. தெலுங்கில் அவர் எதிர்மறை பாத்திரத்தில் நடித்த "எவரு' பெரு வெற்றிபெற்ற நிலையில், அவரது அடுத்தடுத்த படங்களும் பெரும் நம்பிக்கை அளிக்கும் தரமான படங்களாக இருக்கின்றன. தமிழிலும் அவர் அடுத்தடுத்து படங்களில் நடித்துவருகிறார். "திருடன் போலீஸ்' படப்புகழ் இயக்குநர் கார்த்திக் ராஜு இயக்கத்தில் ரெஜினா கஸண்ட்ரா முதன்மை பாத்திரத்தில் நடிக்கும், திரில்லர் படம் "சூர்ப்பனகை'-யின் ஃபர்ஸ்ட் லுக்கை விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார்.

Advertisment

rr

இயக்குநர் கார்த்திக் ராஜு இதுகுறித்து பேசும்போது-

""மக்கள் செல்வன் விஜய் சேதுபதி எங்கள் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டது மொத்த படக்குழுவிற் கும் பெரும் மகிழ்ச்சி'' என்றார்.

Apple Tree Studios சார்பில் ராஜசேகர் வர்மா இப்படத்தை தயாரிக்கிறார். ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் இப் படம் உருவாகிறது.