Advertisment

சூப்பர் ஸ்டார் பிறந்தநாள்! ரசிகர்கள் கொண்டாட்டம்- உற்சாகம்!

/idhalgal/cinikkuttu/super-star-birthday-fans-celebration-excitement

* சூப்பர் ஸ்டார் ரஜினி அரசியல் கட்சி ஆரம்பிப்பது தாமதமானாலும் அவரது 70-ஆவது பிறந்தநாளை தமிழகமெங்கும் உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார்கள் ரசிகர்கள். அந்தக் கொண்டாட்ட ஃபோட்டோக்கள் சில.

Advertisment

* சென்னை தரமணியிலுள்ள புத்து மாரி, பள்ளிப்பட்டு பில்லியம்மா, ராகவேந்திரா கோவில்களில் சிறப்பு பூஜ

* சூப்பர் ஸ்டார் ரஜினி அரசியல் கட்சி ஆரம்பிப்பது தாமதமானாலும் அவரது 70-ஆவது பிறந்தநாளை தமிழகமெங்கும் உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார்கள் ரசிகர்கள். அந்தக் கொண்டாட்ட ஃபோட்டோக்கள் சில.

Advertisment

* சென்னை தரமணியிலுள்ள புத்து மாரி, பள்ளிப்பட்டு பில்லியம்மா, ராகவேந்திரா கோவில்களில் சிறப்பு பூஜை நடத்தினார் தென்சென்னை "செயல்' பெ.ரா. கதிரேசன். ரஜினியின் பெயரில் அர்ச்சனை செய்து, பிரசாதத்தை ரஜினியின் இல்லத்திற்கு நேரில் சென்றுகொடுத்தார் கதிரேசன்.

Advertisment

rajini

* நெல்லை மண்டல ரஜினி மக்கள் மன்றத்தின் செயற்குழு உறுப்பினர் திருநாவுக்கரசு ஏற்பாட்டில், நெல்லை டவுண் தாயம்மை அம்மாள் நடுநிலைப் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு நோட்டு, பேனா வழங்கப்பட்டது. நிகழ்ச் சிக்கு மாவட்ட இணைச் செயலாளர் பகவதி ராஜன் தலைமை தாங்கினார். மா.து.செ. தாயப்பன், மாநகர செயற்குழு உறுப்பினர் போத்தீஸ் முத்து, தச்சை மண்டல செயலாளர் ஆசுகவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நெல்லை மண்டல செயற்குழு உறுப்பினர் சடையப்பன் நன்றி கூறினார்.

* தற்போது சந்தானம் ஹீரோவாக நடிக்கும் "டகால்டி' படத்தின் தயாரிப் பாளர் எஸ்.பி. சௌத்ரி, ரஜினியின் தீவிர ரசிகர். "ஏறுபவனுக்கு இமயமலை! எதிர்ப்ப வனுக்கு எரிமலை!' இந்த அண்ணா மலை என்ற பஞ்ச் டயலாக்குடன் ஃபேஸ் புக்கில் டிசைன் போட்டுள்ளார் சௌத்ரி.

* ரஜினி மக்கள் மன்றம் தென் சென்னை (கிழக்கு) மாவட்டம் சார்பாக மாவட்ட செயலாளர் சினோரா பி.எஸ். அசோக் தலைமையில், 7-ல் இருந்து 70 வரை என்ற தலைப்பில் மாபெரும் சுபநிகழ்ச்சிகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. சென்னை பட்டினம்பாக்கம் பேருந்து நிலையம் அருகில் நடந்த இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக பாலம் கல்யாண சுந்தரம், ஓடந்துறை சண்முகம் ஆகியோர் கலந்துகொண்டார்.

cini241219
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe