Advertisment

சூப்பர் புருஷர்- ஹீரோயின் குஷி!

/idhalgal/cinikkuttu/super-purushar-heroine-kushi

ந்தி, தெலுங்கில் ஒரு ரவுண்டு வந்தாலும், ஆக்ஷன் கிங் அர்ஜூனின் "ஜெய்ஹிந்த்-2' மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானவர் சுர்வீன் சாவ்லா. வழக்கம்போல் சில ஹீரோயின்கள்போல் இவரும் 2015-லேயே தொழிலதிபர் ஒருவரை ரகசிய திருமணம் பண்ணிக்கிட்டார். ஆனா இப்பத்தான் அந்த

ந்தி, தெலுங்கில் ஒரு ரவுண்டு வந்தாலும், ஆக்ஷன் கிங் அர்ஜூனின் "ஜெய்ஹிந்த்-2' மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானவர் சுர்வீன் சாவ்லா. வழக்கம்போல் சில ஹீரோயின்கள்போல் இவரும் 2015-லேயே தொழிலதிபர் ஒருவரை ரகசிய திருமணம் பண்ணிக்கிட்டார். ஆனா இப்பத்தான் அந்தக் கல்யாண மேட்டரையே ஓப்பனா ஓப்பன் பண்ணிருக்காரு.

Advertisment

super

அவரோட பெர்சனல் மேட்டர ஓப்பன் பண்ணுனாரு ஓ.கே. ஆனா அதுக்குப்பிறகு எகிடுதகிடா அவர் சொன்னதக் கேட்டு, மற்ற ஹீரோயின்களின் புருஷர்களெல்லாம் ஆடிப்போயிட்டாங்க. சாவ்லா சொன்னது இதுதான்.

""எனக்கு கல்யாணம் ஆயிருச்சுன்னா ஏன் மற்றவர்கள் அதிர்ச்சியாகுறாங்கன்னு தெரியல. கல்யாணத்துக்குப்பிறகு மார்க்கெட் டல்லாயிரும்கிறது பழங்கதை. எனக்கு கல்யாணத்துக்குப் பிறகுதான் நல்ல நல்ல வாய்ப்புகள் வருது. நான் நடிக்கும் படங்களை செலக்ட் செய்வதே என் கணவர்தான். நான் எப்படி நடிச்சாலும் ஒண்ணும் சொல்லமாட்டாரு. ஹீரோவின் உதட்டோடு உதடு வச்சு முத்தம் கொடுத்தாலும் ஒண்ணும் சொல்லமாட்டாரு. ஏன் ஹீரோகூட நிர்வாணமா படுக்குற சீன்ல நடிக்கும்படி வந்தாலும் ஒண்ணுமே சொல்லமாட்டாரு. இப்படிப்பட்ட ஆண்களின் தயவுதான் ஹீரோயின்களுக்குத் தேவை. நான் சரியான வயசுலதான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். என் புருஷன் மாதிரி மற்ற நடிகைகளுக்கும் அமைந்தால் அவர்களின் வாழ்க்கை சந்தோஷமா இருக்கும்'' என செம குஷியாக சொல்கிறார் சுர்வீன் சாவ்லா.

சுர்வீனுக்கு வாய்த்தவர் புருஷன் அல்ல, சூப்பர் புருஷர்.

Advertisment

Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe