Advertisment

சூப்பர்ஸ்டார் ரசிகர்களின் சூப்பர் பொங்கல்

/idhalgal/cinikkuttu/super-pongal-superstar-fans

2019-ஆம் ஆண்டு சென்னை உட்லண்ட்ஸ் திரையரங்கில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் "பேட்ட' திரைப்படத்தின் ரசிகர்கள் சிறப்புக் காட்சியில், தென்சென்னை (கிழக்கு) மாவட்டம் சார்பாக ஒரு ஏழை ஜோடிக்கு அனைத்து சீர்வரி

2019-ஆம் ஆண்டு சென்னை உட்லண்ட்ஸ் திரையரங்கில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் "பேட்ட' திரைப்படத்தின் ரசிகர்கள் சிறப்புக் காட்சியில், தென்சென்னை (கிழக்கு) மாவட்டம் சார்பாக ஒரு ஏழை ஜோடிக்கு அனைத்து சீர்வரிசைகள் வழங்கி, மிகச் சிறப்பான முறையில் இலவசத் திருமணம் செய்து வைக்கப்பட்டது.

Advertisment

ss

சரியாக ஒரு வருடத்திற்குப்பின், "தர்பார்' பொங்கலில் அதே உட்லண்ட்ஸ் திரையரங்கில் "தர்பார்' திரைப்படத்தின் ரசிகர்கள் சிறப்புக் காட்சியில் அதே திருமண ஜோடிக்குப் பிறந்து சில நாட்களே ஆன பெண் குழந்தைக்கு தங்க மோதிரம், தங்கக் காப்பு மற்றும் தம்பதியருக்கும் குழந்தைக்கும் புது ஆடைகள் அணிவித்து, பெயர் சூட்டு விழா மிகச்சிறப்பான முறையில் நடைபெற்றது.. பெண் குழந்தைக்கு பேட்மின்டன் வீராங்கனை சிந்துவின் பெயர் ரசிகர்கள் அனைவரின் முன்னிலையில் சூட்டப்பட்டது.. தர்பார் பொங்கல் திருவிழா படம் முடிந்து வெளியே வந்த சுமார் 1,500 ரசிகர்கள் அனைவருக்கும் முழு கரும்பு ஒன்று இலவசமாக வழங்கப்பட்டது.. இதில் தென்சென்னை கிழக்கு மாவட்ட ரஜினி மக்கள் மன்ற செயலாளர் "சினோரா' பி.எஸ். அசோக் மற்றும் நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் கலந்துகொண்டனர்.

cini210120
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe