Advertisment

சூப்பர் ஃபாஸ்ட் சூரி

/idhalgal/cinikkuttu/super-fast-suri

னது சினிமா மார்க்கெட் ஸ்டெடியாக இருக்கும்போதே தன்னைப் பலப் படுத்திக் கொள்ளும் வேலைகளில் இறங்கிவிட்டார் காமெடி நடிகர் சூரி. இடையில் கொஞ்சம் டல்லடித்திருந்தாலும், இப்போது மீண்டும் சூரியின் மார்க்கெட் சூடு பிடிக்கத் தொடங்கிவிட்டது. வெற்றிமாறன் டைரக்ஷனில் ஹீரோவாக நடிப்பதால் மகிழ்ச்சியாக இருக்கும் சூரிக்கு ஆகப்பெரிய

னது சினிமா மார்க்கெட் ஸ்டெடியாக இருக்கும்போதே தன்னைப் பலப் படுத்திக் கொள்ளும் வேலைகளில் இறங்கிவிட்டார் காமெடி நடிகர் சூரி. இடையில் கொஞ்சம் டல்லடித்திருந்தாலும், இப்போது மீண்டும் சூரியின் மார்க்கெட் சூடு பிடிக்கத் தொடங்கிவிட்டது. வெற்றிமாறன் டைரக்ஷனில் ஹீரோவாக நடிப்பதால் மகிழ்ச்சியாக இருக்கும் சூரிக்கு ஆகப்பெரிய மகிழ்ச்சி ரஜினி படத்தில் நடிக்க சான்ஸ் கிடைத்ததுதான்.

Advertisment

சன் பிக்சர்ஸ் தயாரிக்க, சிறுத்தை சிவா டைரக்ட் பண்ணும் புதிய படத்தில் கமிட் ஆகியிருக்கி றார் சூரி. இதுகுறித்து சூரியிடம் கேட்டால், ""தலைவர் பட சான்ஸ்னா சும்மாவா? இருந்தாலும் நான் நடிக்கிறேன் என்பதை தயாரிப்பு நிறுவனமும் டைரக்டரும்தான் சொல்லணும். அதுவரைக்கு நோ கமெண்ட்ஸ்'' என்கிறார்.

Advertisment

suri

இதற்கிடையே சில வருடங் களுக்குமுன் மதுரையில் "சூரி புரோட்டா ஸ்டால்' என்ற பெயரில் ஓட்டல் திறந்தார் சூரி. லேட்டஸ்டாக கடந்த நவம்பர் 1-ஆம் தேதி அதே மதுரையில் "அய்யன்', "அம்மன்' என்ற பெயரில் உயர்தர சைவ- அசைவ ஓட்டல் களைத் திறந்துள்ளார். இரு ஓட்டல்களையும் சூரியின் வளர்ச்சியில் அக்கறை கொண்டவரும், நலன் விரும்பி யுமான நடிகர் சிவகார்த்திகேயன் திறந்து வைத்து, குத்து விளக்கு ஏற்றினார். மதுரையின் வி.ஐ.பி.க்களில் பாதிப் பேர் இப்போது "அய்யன்', "அம்மன்' ஓட்டல்களின் வாடிக்கை யாளர்களாகிவிட்டனராம்.

இப்போ அதைவிட லேட்டஸ்ட் சங்கதி என்னன்னா... சென்னை சாலிகிராமத்தில் நடிகை மீனா வீட்டின் அருகே தான் சூரியின் அலுவலகம் இருக்கு. இப்போது குடியிருக்கும் வீட்டைவிட பெரிய வீட்டிற்கு போவதால், ஆறு கோடி மதிப்பிலான சாலிகிராம வீட்டை விற்கும் முடிவிற்கு மீனா வந்துள்ளாராம். இதைக் கேள்விப்பட்ட சூரி, அந்த வீட்டை வாங்கும் முடிவில் இருக்காராம். இதப்பத்திதான் இப்போது கோடம் பாக்கத்தில் கூடிக்கூடிப் பேசுகிறார்கள்.

-ஈஷ்வரன்

cini031219
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe