விஜய் தேவர கொண்டா- பூஜா ஜாவேரி நடித்து தெலுங்கில் "துவாரகா' என்ற பெயரில் வெளியாகி வெற்றியடைந்த படத்தை ஸ்ரீ லக்ஷ்மி ஜோதி கிரியேஷன்ஸ் படநிறுவனம் சார்பாக ஏ.என். பாலாஜி தமிழில் தயாரித்துள்ள "அர்ஜூன் ரெட்டி' படம் வருகிற 26-ஆம் தேதி ரிலீசாகிறது.
""முழுக்க முழுக்க காமெடி கலந்த திரைக்கதை அனைவரையும் ரசிக்க வைக்கும். கோடைக்கு இதமாக இந்த "அர்ஜுன் ரெட்டி' இருக்கும். நெல்லை பாரதியின் பாடல்கள் ஒவ்வொன்றும் ஒருவிதம். அனைத்தும் ரசிக்க வைக்கும்'' என்கிறார் ஏ.என். பாலாஜி. ஒளிப்பதிவு- ஸ்யாம் கே.நாய்டு, இசை- சாய்கார்த்திக், எடிட்டிங்- பிரேம்.