Advertisment

கஷ்டப்பட்டேன் நஷ்டப்படல -முந்தல் இயக்குநர் உற்சாகப் பேட்டி!

/idhalgal/cinikkuttu/suffer-loss-director-munthal-interviewed

ஸ்டண்ட் இயக்குனராக இருந்து, முழு படத்தையும் இயக்கும் அளவுக்கு புரமோஷன் ஆகியிருக்கிறார் ஜெயந்த். அப்பு கிருஷ்ணாவை அறிமுக ஹீரோவாக்கி, ஜெயந்த் டைரக்ட் பண்ணிய முதல் படம் "முந்தல்.' சித்த மருத்துவத்தை அடிப்படையாகக்கொண்டு உருவான டிராவல் அட்வெஞ்சர் படமான "முந்தல்' 50-ஆவது நாள் விளம்பரத்தைப் பார்த்து ஆச்சர்யப்பட்டு, டைரக்டர் ஜெயந்தை சந்தித்தோம்.

Advertisment

muthal-directorபெரிய பெரிய படங்களே புஸ்ஸுன்னு போகும்போது, உங்களோட "முந்தல்' மட்டும் எப்படிங்க 50 நாள் ஓடுது? நீங்க யாரு?உங்களைப் பத்தி சொல்லுங்க என ஆரம்பித்தோம்.

Advertisment

""எனக்கு பூர்வீகம் ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே இருக்கும் கடற்கரை கி

ஸ்டண்ட் இயக்குனராக இருந்து, முழு படத்தையும் இயக்கும் அளவுக்கு புரமோஷன் ஆகியிருக்கிறார் ஜெயந்த். அப்பு கிருஷ்ணாவை அறிமுக ஹீரோவாக்கி, ஜெயந்த் டைரக்ட் பண்ணிய முதல் படம் "முந்தல்.' சித்த மருத்துவத்தை அடிப்படையாகக்கொண்டு உருவான டிராவல் அட்வெஞ்சர் படமான "முந்தல்' 50-ஆவது நாள் விளம்பரத்தைப் பார்த்து ஆச்சர்யப்பட்டு, டைரக்டர் ஜெயந்தை சந்தித்தோம்.

Advertisment

muthal-directorபெரிய பெரிய படங்களே புஸ்ஸுன்னு போகும்போது, உங்களோட "முந்தல்' மட்டும் எப்படிங்க 50 நாள் ஓடுது? நீங்க யாரு?உங்களைப் பத்தி சொல்லுங்க என ஆரம்பித்தோம்.

Advertisment

""எனக்கு பூர்வீகம் ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே இருக்கும் கடற்கரை கிராமமான மூக்கையூர்தான். பொழைப்புக்காக வெள்ளைக்காரன் காலத்துக்கு முன்ôலயே எங்க மூதாதையர்கள் ராமேஸ்வரத்துக்கு மைக்ரேட் ஆனார்கள். மீன்பிடிதான் எங்களின் தொழில். தொழில் நேரம் போக, அப்ப இலங்கையிலிலிருந்து வரும் ஒரு மாஸ்டரிடம் முறைப்படி சிலம்பம், குஸ்தி எல்லாம் கத்துக்கிட்டேன். 1988-ஆம் வருஷம் சென்னைக்கு வந்து சினிமாவுல கால வச்சேன்.

250 படங்களுக்கும்மேல, ஸ்டண்ட் நடிகரா வேலை பார்த்தேன். டெக்னாலஜி இல்லாத அந்தக் காலத்திலயும் சரி, எல்லா டெக்னாலஜியும் இருக்கும் இந்தக் காலத்திலும் சரி, ஸ்டண்ட் நடிகரா இருக்குறது உயிர் போய் உயிர் வர்ற மாதிரிதான். உயிரோடு கலந்ததுதான் நான் ஸ்டண்ட் டைரக்டரா அறிமுகமான முதல் படம். நான் பட்ட துன்பம் மற்ற ஸ்டண்ட் நடிகர்கள் படக்கூடாது என்பதற்காகவே, நான் மாஸ்டரான பிறகு, ரொம்ப கஷ்டமான ஷாட்களை வைக்கவே மாட்டேன். சுருக்கமா சொன்னா மெழுகுவர்த்தியும் ஸ்டண்ட் நடிகர்களும் ஒண்ணு சார்.

டைரக்டராக வேண்டும் என்பது எனது நீண்டநாள் லட்சியம். ரெண்டு மூணு ஹீரோக்களிடம் கதை சொல்லிலி, எதுவும் செட்டாகாததால, புதுமுகம் அப்பு கிருஷ்ணாவை அறிமுகப்படுத்தி, நாமளே தயாரிக்கலாம்னு நம்பிக்கையோட களத்துல இறங்குனேன். முதல் படமே சமூக விழிப்புணர்வு படமா இருக்கணும்னு முடிவு பண்ணி, இந்தக் கதையை தயார் பண்ணினேன். புற்றுநோய்க்கான சித்த மருத்துவத்தைத் தேடி சாகசப் பயணம் போகும் கதை என்பதால், கம்போடியா, அந்தமான், வண்டிப் பெரியார், தூத்துக்குடி என 46 லொக்கேஷன்களில் ஷூட்டிங் நடத்தினேன்.

அதிலும் கம்போடியா அங்கூர்லா கோவிலில் ஷூட்டிங் நடத்தியதை மறக்கவே முடியாது. 6 கி.மீ. சுற்றளவுள்ள அந்தக் கோவில் 3500 ஆண்டுகளுக்கு முன்பு சோழ மன்னர்களால் கட்டப்பட்டது. மண் மேடாகிவிட்ட அந்தக் கோவிலை 1600 ஆண்டுகளுக்கு முன்புதான் கண்டுபிடித்தார்கள். புற்றுநோயை ஒழிக்கும் அந்த சித்த மருந்தை புனிதமான கோவிலில் இருந்து மீட்டால் நல்லாயிருக்கும் என நினைத்துத்தான் அந்தக் கோவிலில் ஷூட்டிங் நடத்தினோம். அஞ்சு வருஷம் குங்ஃபூ, நீச்சல் பயிற்சியெல்லாம் கத்துக்கிட்டு வந்த ஹீரோ அப்பு கிருஷ்ணாவின் உழைப்பு மிகக் கடுமையானது.''

சரிங்க- போட்ட காசு கைக்கு வந்துச்சா? இல்லையா?

"படம் எடுக்கும்போது கஷ்டப்பட்டேனே தவிர, இந்தப் படத்தால் நஷ்டப்படலைங்கிறதுதான் நிஜம்.

muthal-director

நிறைய தியேட்டர்காரர்கள் மனசாட்சிப்படி நடந்து, எனக்கு சேரவேண்டிய தொகையைக் கொடுத்தார்கள்.

எனது உழைப்பையும் முயற்சியையும் விக்ரமன், ஆர்.கே. செல்வமணி உள்ளிட்ட பல சீனியர் இயக்குனர்கள் மனம் திறந்து பாராட்டினார்கள். இந்தப் பாராட்டு எனக்கு மேலும் உத்வேகத்தையும் நம்பிக்கையையும் கொடுத்திருக்கிறது. பெரிய ஹீரோ ஒருவரை வைத்து படம் பண்ணும் முயற்சி விரைவில் கைகூடும். நீங்களே வந்து என்னை கைகுலுக்கி வாழ்த்துவீர்கள்'' என்றார் உற்சாகத்துடன் ஜெயந்த்.

-ஈ.பா. பரமேஷ்

Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe