Advertisment

திடீர் திருப்பம்! மக்கள் தலைவரானார் ரஜினி! தி.மு.க.வில் சேர்கிறார் விஜய்?

/idhalgal/cinikkuttu/sudden-turn-rajini-became-president-people-vijay-joins-dmk

ஜினியும் கமலும் அரசியலுக்கு வந்து விட்டார்கள். நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷாலும் ஆர்.கே.நகர் தேர்தல்வரை வந்து குழப்பி அடித்தார். ஆளாளுக்கு அரசியல் களத்தில் அனலையும் அக்கப்போரையும் கிளப்பிவரும் நேரத்தில், கலைஞரின் வசனத்தில் அரசியல் சாட்டையடி படங்களை எடுத்த எஸ்.ஏ. சந்திரசேகரின் மகனான விஜய் சும்மா இருப்பாரா; இல்ல- சும்மாதான் இருக்கவிடுவார்களா?

Advertisment

rajini

ஏ.சி. சண்முகத்தின் எம்.ஜி.ஆர். மருத்துவக் கல்லூரியில் கடந்த 5-ஆம் தேதி எம்.ஜி.ஆர். சிலையைத் திறந்துவைத்தார் ரஜினி. ரஜினி மக்கள் மன்றத் தலைமையும் ஏ.சி. சண்முகமும் செய்திருந்த பக்காவான ஏற்பாட்டால், கல்லூரியின் மைதானத்திலும் விழா நடந்த பட்டமளிப்பு விழா அரங்கிலும் சேர்த்து பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட வர்கள் திரண்டனர்.

மாலை ஐந்தரை மணிக்கு கல்லூரி வளாகத்தில

ஜினியும் கமலும் அரசியலுக்கு வந்து விட்டார்கள். நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷாலும் ஆர்.கே.நகர் தேர்தல்வரை வந்து குழப்பி அடித்தார். ஆளாளுக்கு அரசியல் களத்தில் அனலையும் அக்கப்போரையும் கிளப்பிவரும் நேரத்தில், கலைஞரின் வசனத்தில் அரசியல் சாட்டையடி படங்களை எடுத்த எஸ்.ஏ. சந்திரசேகரின் மகனான விஜய் சும்மா இருப்பாரா; இல்ல- சும்மாதான் இருக்கவிடுவார்களா?

Advertisment

rajini

ஏ.சி. சண்முகத்தின் எம்.ஜி.ஆர். மருத்துவக் கல்லூரியில் கடந்த 5-ஆம் தேதி எம்.ஜி.ஆர். சிலையைத் திறந்துவைத்தார் ரஜினி. ரஜினி மக்கள் மன்றத் தலைமையும் ஏ.சி. சண்முகமும் செய்திருந்த பக்காவான ஏற்பாட்டால், கல்லூரியின் மைதானத்திலும் விழா நடந்த பட்டமளிப்பு விழா அரங்கிலும் சேர்த்து பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட வர்கள் திரண்டனர்.

மாலை ஐந்தரை மணிக்கு கல்லூரி வளாகத்தில் ரஜினி யின் கார் நுழைந்ததும் ஒட்டுமொத்தக் கூட்டமும் ஆர்ப் பரித்தது. ஏ.சி.எஸ்.ஏற்பாடு செய்திருந்த திறந்தவெளி காரில் கூட்டத்தினரைப் பார்த்துக் கும்பிட்டபடியும் கை அசைத்தபடியும் வந்த ரஜினி, எம்.ஜி.ஆர். சிலை வந்ததும் கீழே இறங்கினார். ரஜினியுடன் காரில் வந்த பிரபுவும் விஜயகுமாரும் அவர் பின்னே வர, மஞ்சள் துணியை விலக்கி, எம்.ஜி.ஆர். சிலையைத் திறந் தார் ரஜினி.

Advertisment

rajini

சிலை திறப்பு விழா முடிந்ததும் விழா அரங்கிற்கு வந்த ரஜினியைப் பார்த்ததும் எழுந்த மக்களின் ஆரவாரம் அடங்க வெகு நேரம் ஆனது. அ.தி.மு.க.வின் மாஜி எம்.எல்.ஏ.க் கள், எம்.ஜி.ஆரின் ஹீரோயின் களான லதா, வெண்ணிற ஆடை நிர்மலா மற்றும் அம்பிகா, தயாரிப்பாளர் கள் கலைப்புலிலி தாணு, ஆர்.பி. சௌத்ரி, டைரக்டர்கள் எஸ்.ஏ. சந்திரசேகர், ஆர்.கே. செல்வமணி, விக்ரமன், கே.எஸ். ரவிக்குமார், பி. வாசு, ஆர். பாண்டியராஜன் ஆகியோருக்கு எம்.ஜி.ஆர். விருதுகளை தன் கையால் வழங்கி விருதாளர்களை மகிழ்ச்சிப்படுத்தினார் ரஜினி.

விருது வாங்கிய அனைவரும் ரஜினி முதல்வராகியே தீரவேண்டும் என்ற ரேஞ்சில் பேசினர். கலைப்புலிலி தாணு பேசும்போது, ""ரஜினி அவர்களுக்கு சூப்பர் ஸ்டார் பட்டம் கொடுத்தேன். இப்போது அவருக்கு மக்கள் தலைவர் பட்டம் கொடுக்கிறேன். இனிமேல் ரஜினிதான் உண்மையான மக்கள் தலைவர்'' எனப் பேசி அரங்கத்தையே அதிர வைத்தார். விஜய்யின் அப்பாவான எஸ்.ஏ. சந்திரசேகர், தனது காலிலில்விழ முயற்சித்தபோது, குனிந்து தடுத்தார் ரஜினி. பின்னர் எஸ்.ஏ.சி. பேசிய போது, ""அண்ணன் ரஜினி அவர்கள் தமிழக முதல்வராவது காலத்தின் கட்டாயம்'' என்றதும் அனைவரும் ஆச்சரியமா கப் பார்த்தனர்.

rajini

எஸ்.ஏ.சி.யின் செயலும் பேச்சும் விஜய்க்கு பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி யிருக்கிறது. தமிழக முதல் வராவதற்கு எனது மகனுக்குத் தகுதி இருக்கிறது என இத்தனை வருஷம் சொல்லிலிவந்த தனது அப்பா, இப்போ ரஜினி முதல்வராக வேண்டுமென்று சொன்னால் விஜய் அதிர்ச்சி ஆகாமல் என்ன செய்வார். விஜய்யின் இந்த அதிர்ச்சியை தனக்குச் சாதமாக்கும் வேலைகளில் இறங்கி விட்டது தி.மு.க. தரப்பு.

"காவலன்' பட விஷயத்தில் தி.மு.க. ஆட்சியில் நடந்த சில கசப்பான சம்பவங்களால் அ.தி.மு.க. பக்கம் சைடு அடித்தனர் எஸ்.ஏ.சி.யும் விஜய்யும். ஆனால் வழக்கம்போல் ஜெயலலிதாவின் குணாதிசயப்படி, அவமானப்படுத் தப்பட்டனர்.

thanu-rajini

இதையெல்லாம் விட "தலைவா' படத்தை ரிலீஸ் பண்ணுவதற் குள் படாதபாடுபட்டனர் எஸ்.ஏ.சி.யும் விஜய்யும். எல்லாத்தையும் மனசுக்குள் ரீவைண்ட் பண்ணிப் பார்த்த விஜய், சன் டி.வி. கலாநிதிமாறனுடன் கைகோர்த்ததன் எஃபெக்ட்தான், விஜய்யின் 62-ஆவது படத்தைத் தயாரிக்கிறது சன் பிக்சர்ஸ்.

ஏ.ஆர். முருகதாஸ் டைரக்ஷனில் உருவாகும் இப்படத்தில் தி.மு.க. வி.ஐ.பி.க்களான பழ. கருப்பையாவும் ராதாரவியும் வில்லன் வேஷம் போடுகிறார்கள். இவர்கள் இருவரும் விஜய்யின் பல்ஸ் பார்த்து, தி.மு.க.வுக்கு கொண்டுவரும் நல்ல காரியத்திலும் இறங்கி யிருப்பதாக நம்பத்தகுந்த விஜய் யின் வட்டாரம் ஊர்ஜிதப் படுத்தியது. மேற் படி சீனியர்கள் ஒருபுறம் என்றால், தமிழகத்தில் இப்போது நல்ல தலைவர்கள் இல்லை என ரஜினி சொல்லிலியதால், அவர்மீது அதிருப்தியில் இருக்கும் தி.மு.க.வின் செயல்தலைவர் மு.க. ஸ்டாலிலினின் மகன் உதயநிதியும் தன் பங்குக்கு விஜய்யை தி.மு.க.வுக்கு இழுக்கும் வேலைகளில் மும்முரமாக இறங்கியுள்ளா ராம்.

தமிழ்நாடு பாலிலிடிக்ஸ் சும்மா அதிருதுல்ல.

-ஈ.பா. பரமேஷ்

ஸ்டில்ஸ்: எஸ்.பி. சுந்தர்

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe