"டேக் ஓகே சினிமாஸ்' நிறுவனம் சார்பில் பி. ராஜன் தயாரிக்கும் படம் "மிரட்சி.' நடிகர் "ஜித்தன்' ரமேஷ் இந்தப் படத்தின்மூலம் வில்லன் கதாபாத்திரத்தில் களமிறங்குகிறார்.

Advertisment

பாலிவுட் நடிகை ஷ்ரத்தா தாஸ் மற்றும் கொல்கத்தாவைச் சேர்ந்த இனாசஹா இருவரும் கதாநாயகி களாக நடித்துள்ளனர். மற்றும் அஜெய்கோஸ், சாய், சனா, நிக்கிதா அனில்குமார் ஆகியோர் நடித்துள்ளனர்.

Advertisment

ஒளிப்பதிவு- ரவி.வி, எடிட்டர்- என். ஹரி, இசை- ஆனந்த், பாடல்கள், வசனம்- என். ரமேஷ், தயாரிப்பு- பி. ராஜன், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்- எம்.வி. கிருஷ்ணா.

படம் பற்றி இயக்குநர் நம்மிடம் பேசும்போது-

dd

"""மிரட்சி', ஒரு வித்தியாச மான "சைக்கோ' திரில்லர் கதையம்சம் கொண்ட படம். இதுவரை வெளியான "சைக்கோ' திரில்லர் படங்கள் எல்லாமே ஒரே சீரியஸ் மூடில் மட்டுமே படமாக் கப்பட்டிருக்கும். ஆனால் இந்தப் படத்தில் அந்தவ கையான சீரியஸ் மூட் அதிகமாகவும், மிரட்ட லாகவும் இருந்தாலும், இளமையான, அழகான காதலும், தரமான காமெடி களும், ஆக்ரோஷமான சண்டைக்காட்சிகளும், மனதை மயக்கும் இசையில் தெளிவான பாடல்களும் இடம்பெற்றிருக்கும்.

தனது காதலுக்கு எதிராக இருக்கும் அம்மாவைமீறி தன்னை உயிராக நேசிக்கும் நாயகனின் காதலை ஏற்க தன்னுள் மனப்போராட்டம் நடத்துகிறாள் ஹீரோயின்.

அந்தநிலையில் பெண்களைக் கடத்தி கொலை செய்யும் சைக்கோ கொலைகாரனிடம் மாட்டிக்கொள்கி றாள். இறுதியில் அவளுக்கு என்ன நேர்ந்தது என்பதே திரைக்கதை.

கோவாவில் நடந்த உண்மைச் சம்பவத்தைக் கொண்டுதான் இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறேன். அதனால் மொத்த ஷூட்டிங்கும் கோவாவில்தான் நடந்தது. "மிரட்சி' உங்களைக் கண்டிப்பாக மிரளவைக்கும்'' என்கிறார். படத்தின் ஸ்டில் சைப் பார்த்தாலே மிரட்டலாத் தான் இருக்கு.

Advertisment