Advertisment
/idhalgal/cinikkuttu/story

"ஆம்பளக்குத்தான் அதிகம்'

astory

Advertisment

கடந்த சில தினங்களுக்குமுன் ஹாலிவுட் திரையுலகின் முன்னாள், இன்னாள் ஹாலிவுட் நாயகிகள் தாங்கள் சந்தித்த பாலியல் தொந்தரவுகளை பகிரங்கமாக அறிவித்து பரபரப்பு கிளப்பினர். MeTooஎன்ற ஹேஷ்டேக்குடன் அவர்கள் அதை ட்ரெண்டும் ஆக்கினர்.

அந்தப் பாணியைப் பின்பற்றி, இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் பெண் எம்.பி.க்கள் இணைந்து ஆண்களுக்கு நிகரான சம்பளம் வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர். PaymeToo என்ற ஹேஷ்டேக்குடன் தங்கள் ஊதிய விவரங்களை பல பெண்கள் பதிவிட்டு, இந்தப் பிரச்சினையின் தீவிரத்தை உணர்த்தி இருக்கின்றனர்.

இந்தக் கோரிக்கைக்கு, சமீபத்தில் ஆஸ்கர் விருதுபெற்ற ஹாலிவுட் நடிகை எம்மா ஸ்டோனும் ஆதரவு தெரிவித்திருக்கிறார். ஹாலிவுட்டிலும்கூட இந்த பிரச்சினை இருக்கத்தான் செய்கிறது என்று

"ஆம்பளக்குத்தான் அதிகம்'

astory

Advertisment

கடந்த சில தினங்களுக்குமுன் ஹாலிவுட் திரையுலகின் முன்னாள், இன்னாள் ஹாலிவுட் நாயகிகள் தாங்கள் சந்தித்த பாலியல் தொந்தரவுகளை பகிரங்கமாக அறிவித்து பரபரப்பு கிளப்பினர். MeTooஎன்ற ஹேஷ்டேக்குடன் அவர்கள் அதை ட்ரெண்டும் ஆக்கினர்.

அந்தப் பாணியைப் பின்பற்றி, இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் பெண் எம்.பி.க்கள் இணைந்து ஆண்களுக்கு நிகரான சம்பளம் வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர். PaymeToo என்ற ஹேஷ்டேக்குடன் தங்கள் ஊதிய விவரங்களை பல பெண்கள் பதிவிட்டு, இந்தப் பிரச்சினையின் தீவிரத்தை உணர்த்தி இருக்கின்றனர்.

இந்தக் கோரிக்கைக்கு, சமீபத்தில் ஆஸ்கர் விருதுபெற்ற ஹாலிவுட் நடிகை எம்மா ஸ்டோனும் ஆதரவு தெரிவித்திருக்கிறார். ஹாலிவுட்டிலும்கூட இந்த பிரச்சினை இருக்கத்தான் செய்கிறது என்று ஆவேசப்பட்டிருக்கிறார்.

Advertisment

சமீபத்தில் கோலிவுட்டைச் சேர்ந்த ஷிவதா நாயர், ராய்லட்சுமி மற்றும் மஹிமா நம்பியார் உள்ளிட்ட நடிகைகள், ""நடிகர்களுக்கு நிகரான சம்பளம் வழங்கவேண்டும். நாங்கள் வாங்கும் சம்பளம் உதவி ஆட்களுக்குக்கூட போதாது'' என குமுறியிருக்கின்றனர். ஹாலிவுட்டே நாறும்போது கோலிவுட் எந்த கார்னரோ!

க்ளாமர் லாயர்

richaa"கேங்ஸ் ஆஃப் வாசிப்பூர்', "ஃபக்ரே' போன்ற வெற்றிப்படங்களில் நடித்தவர் ரிச்சா சதா. ஸ்டுடியோக்களில் பிஸியாக இருக்கவேண்டிய இவர் சமீபகாலமாக நீதிமன்ற வழக்கு விசாரணைகளில் பிஸியாக இருக்கிறாராம். நீதிமன்றமே கதி என்று கிடக்கிற அளவுக்கு அப்படி என்ன குற்றம் செய்துவிட்டார்? நீங்கள் நினைப்பதுபோல், அவர்மீது எந்த வழக்கும் இல்லை. தான் நாயகியாக நடித்துக்கொண்டிருக்கும் "செக்ஷன் 375' படத்துக்காகத்தான் இவ்வளவு ஃபீல்டு ஒர்க்காம்.

என்னதான் வழக்கறிஞராக நடித்தாலும், நீதிமன்ற வழக்கு விசாரணை, நீதிபதியை திணறடிக்கும் வாதங்கள் என்று எதுவுமே அவர் பார்த்ததில்லையாம். அதுமட்டும் இல்லாமல், தனது வழக்கறிஞர் நண்பர்களிடமும் சிலபல டிப்ஸ்களை கேட்டு வைத்துக்கொண்டு, ஷூட்டிங் ஸ்பாட்டை அதகளப்படுத்துகிறாராம் ரிச்சா. எல்லாம் சரி- படத்துல அவுங்க பழைய ரிச்சாவா வருவாங்களா என்பது தான் மில்லியன் டாலர் கேள்வியாக இருக்கிறது.

காப்பியடிப்பேன்!

சமீபத்தில் சென்னைக்கு வந்தார் பாலிவுட் நடிகை கரிஷ்மா கபூர். ஒரு கடைத் திறப்புவிழாவுக்கு வந்திருந்த அவர், ""சமீபத்தில் எந்த தமிழ்ப்படமும் பார்க்கவில்லை. ஆனால், தமிழில் சிறந்த படங்கள் உருவாவது தெரியும்.

அவை இந்தியில் ரீமேக் செய்யப்படுவதும் தெரியும். ஸ்ரீதேவியின் நடனம் எனக்குப் பிடிக்கும். அவருடைய ஸ்டெப்ஸை காப்பியடித்து நான் ஆடியிருக் கிறேன்'' என்றார்.

"ஏ ஸ்டோரி'ன்னு ஒரு இணையத் தொடர் வரப்போகுதுங்க. ஒவ்வொரு எபிசோடும் 15 நிமிஷம்தான் ஓடுமாம். கதை sreenilaஎன்னான்னு கேப்பீங்களே.

அதான் தலைப்பிலேயே சொல்லிட்டமே. "ஏ' மேட்டர்தான். இதுல நடிக்கிறதுக்கு ஸ்ரீநிகா என்ற நடிகையைத் தயார் செஞ்சிருக்காரு டைரக்டர் நிமேஷ்.

ஒரு காலத்தில் வேலை செய்யும் இடத்தில் பெண்களுக்கு நடக்கும் பாலியல் சீண்டல்களை வெளியில் சொல்ல கூச்சப்படுவார்கள். வயித்துப்பாட்டுக்காக சீண்டல்களை சகித்துக்கொண்டு போவார்கள் சிலர். வேறு சிலரோ இடத்தை மாற்றுவார்கள். மாறிப்போகிற இடங்களிலும் அப்படி என்றால் அதுவே பழகிப்போகும்.

இப்படித்தான், ஹாலிவுட்டில் தன்னை சினிமாவில் நடிப்பதற்காக படுக்கைக்கு அழைத்த டைரக்டரைப் பற்றி ஒரு நடிகை சொன்னாலும் சொன்னார். அவருக்கு உலகம் பூராவும் கிடைத்த சப்போர்ட்டைப் பார்த்து பாலிவுட், கோலிவுட், டோலிவுட் என்று எல்லா வுட்டுகளில் இருந்தும் நடிகைகள் தங்கள் அனுபவங்களை வெளிப்படுத்தத் தொடங்கினார்கள்.

சினிமாவில்தான் அப்படியென்றால் இப்போ கல்விக்கூடங்களிலும் இதுபோன்ற ஏடாகூடங்கள் வெளியாகி கவர்னர் மாளிகைவரை கலகலத்துப் போயிருக்கிறது.

டைரக்டர் நிமேஷ் தான் எடுக்கப்போகும் "ஏ ஸ்டோரி' தொடரில் 30 எபிசோடுகளை வைத்திருக்கிறாராம். "ஒவ்வொரு எபிசோடும் கதைக் கருவுக்கு ஏற்றபடி டேரிங்கான வசனங்களோடு இருக்கும். அதேசமயம் ஆபாசம் இருக்காது' என்கிறார்.

தொடர் வந்தால்தான் தெரியும் கதைக்கருவாக எதைத் தேர்வு செய்திருக்கிறார்

என்று. ஆனால், ஒன்று, நிச்சயமாக சமீபத்திய பாலியல் சீண்டல்கள், சுசீ லீக்ஸ், ஸ்ரீ லீக்ஸ் எல்லாம் கலந்த கலவையாகத்தான் இருக்கும் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe