Advertisment

தூக்குற மேட்டர்தான் கதை! -டைரக்டர் அழகுராஜ் ஓப்பன் டாக்!

/idhalgal/cinikkuttu/story-looming-story-director-nenyarraj-open-dog

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் "அன்பே வா' படத்தில் வரும் "ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்' என்ற பாடல் வரியிலேயே ஒரு படம் தயாராகி, வருகிற 7-ஆம் தேதி ரிலீசாகிறது. படத்துல என்னங்க ஸ்பெஷல் என டைரக்டர் அழகுராஜிடம் கேட்டோம்.

Advertisment

alaguraj""கலைஞர் டி.வி.யில் ஒளிபரப்பாகும் "நாளைய இயக்குனர்' புரோக்கி ராமில் அஸிஸ்டென்ட் டைரக்டரா இருந்து, கொஞ்சம் கொஞ்சமா வளர்ந்து அந்த புரோக்கிராமின் சீசன்-5 ஐ டைரக்ட் பண

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் "அன்பே வா' படத்தில் வரும் "ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்' என்ற பாடல் வரியிலேயே ஒரு படம் தயாராகி, வருகிற 7-ஆம் தேதி ரிலீசாகிறது. படத்துல என்னங்க ஸ்பெஷல் என டைரக்டர் அழகுராஜிடம் கேட்டோம்.

Advertisment

alaguraj""கலைஞர் டி.வி.யில் ஒளிபரப்பாகும் "நாளைய இயக்குனர்' புரோக்கி ராமில் அஸிஸ்டென்ட் டைரக்டரா இருந்து, கொஞ்சம் கொஞ்சமா வளர்ந்து அந்த புரோக்கிராமின் சீசன்-5 ஐ டைரக்ட் பண்ணும் அளவுக்கு வந்தேன். சினிமாவுக்கு வரும் வெளிமாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் படாதபாடுபட்டு டைரக்டர் ஆவார்கள். நான் சென்னையைச் சேர்ந்தவன் என்பதால் அந்தளவுக்கு கஷ்டப்படலைன்னாலும் ஓரளவு கஷ்டப்பட்டேன். டான்ஸ்ல பெரிய சாம்பியனாகணும்கிறது என்னோட ஆம்பிஷன். 2002-ல் "சன் டி.வி.'யில் வந்த "தில்லானா தில்லானா'-வின் சாம்பியன்தான் நான். அது கொடுத்த வெளிச்சத்தால்தான் டைரக்ட் பண்ணும் ஐடியா வுக்கு வந்தேன்.

Advertisment

ஆறு வருஷம் கஷ்டப் பட்டு, இப்போது "ராஜா வின் பார்வை ராணியின் பக்கம்' மூலம் டைரக்டராக அறிமுகமாகிறேன்.

எனக்கு வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர் விகாஷ் ரவிச்சந்திரனுக்கு ரொம்பவும் நன்றி. படத்தோட கதை ஒண்ணும் பெருசா சொல்லிக்கிற மாதிரி இருக்காது. லவ் பிரேக்-அப் ஆன ஒரு இளைஞன் ரொம்பவும் விரக்தியாகி, தனது நண்பனிடம் "என்னை ஏமாத்துன அவளை போட்டுத் தள்ளணூம்டா' என ஆவேசமாகிறான்.

alaguraj

"ஆளைப் போட்டுத் தள்ளும் டான் ஒருத்தர் இருக்காரு. மத்தவங்களுக் குன்னா லட்சக்கணக்குல ரேட் கேப்பாரு. ஆனா எனக்காக மட்டும் சரக்கு, சைடிஷ், சாப்பாடுக்கு ஓ.கே. சொல்லிருவாரு. அவரக் கூட்டிக்கிட்டு, பொள்ளாச்சி போறோம், அவளோட கல்யாணத்தை நிப்பாட்டி அவளையே தூக்குறோம்' என உசுப்பேத்தி மூவரும் பொள்ளாச்சி போகிறார்கள். க்ளைமாக்ஸ்தான் அதிரடி திருப்பமா இருக்கும். இது அடெல்ட் காமெடி படம் தான். "ஹரஹர மகாதேவகி'க்கு முன்னாலேயே இந்தப் படம் தயாராகிருச்சு. இப்பதான் ரிலீஸ் பண்ண முடிஞ்சது.

படத்தின் ஹீரோ ஆதவா 8 பேக் பாடியுடன் ஒரு ஃபைட் சீனில் அதகளம் பண்ணிருக்காரு. ஹீரோயின் அவந்திகாவும் நல்லா பெர்ஃபாமென்ஸ் பண்ணிருக்காங்க. கேமராமேன் சந்தான கிருஷ்ணன், மியூஸிக் டைரக்டர் லியாண்டர் லீ மார்டின், ஸ்டண்ட் மாஸ்டர் ஆக்ஷன் பிரகாஷ், எடிட்டர் இத்ரீஸ், டான்ஸ் மாஸ்டர் சுரேஷ் ஆகியோரின் ஒத்துழைப்புடன் படம் சிறப்பாகவே வந்திருக்கு'' என்றார்.

-பரமேஷ்

cine110918
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe