பி.ஜி.பி. என்டர்பிரைசஸ் சார்பில் பி.ஜி. பிச்சைமணி தயாரிப்பில் உருவாகிவரும் படம் "துப்பாக்கியின் கதை.'

Advertisment

இயக்குநர் விஜய் கந்தசாமி இயக்கும் இந்தப் படத்தில் சிவநிஷாந்த் ஹீரோ வாக நடிக்க, பெங்களூருவைச் சேர்ந்த நீருஷா கதாநாயகியாக நடிக்கிறார்.

Advertisment

மேலும் டேனியல், ஆர்.எஸ். சிவாஜி, ஜார்ஜ், முக்கியமான ரோலில் இலங்கை நடிகர் லால்வீர்சிங் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

gg

சஞ்சனா, தெலுங்கு நடிகர் ஸ்ரீஹர்ஷா ஆகியோரும் நடிக்கின்றனர்.

சாய் பாஸ்கர் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.

""ஆக்ஷன் த்ரில்லராக உருவாகும் "துப்பாக்கியின் கதை' இளைஞர்கள் ரசிக்கக்கூடிய படமாக உருவாகி வருகிறது.

Advertisment

படத்தின் கதை உண்மையிலேயே ஒருவரது வாழ்க்கையில் நடந்த நிகழ்வை மையப்படுத்தி, அதன் தாக்கத்தில் உருவான கதைதான்.

படம் பார்க்கும்போது இந்த நிகழ்வு எங்கே நடந்தது, யாருக்கு நடந்தது என்பதை ரசிகர்கள் நன்றாகவே தெரிந்துகொள்வார்கள்'' என்கிறார் இயக்குநர் விஜய் கந்தசாமி.

கோவையில் முதற்கட்ட படப் பிடிப்பை ஒரே மூச்சில் 35 நாட்களில் நடத்தி முடித்துவிட்டு, இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்காக வெளிநாடு செல்ல இருக்கின்றனர் படக்குழுவினர்.

இந்தப் படத்தின் தயாரிப்பாளர் பி.ஜி. பிச்சைமணி அடிப்படையில் கட்டுமானத் தொழில் செய்துவருபவர். அவரும் இயக்குநர் விஜய் கந்தசாமியும் கடந்த பத்து வருடங்களாக நண்பர் களாக இருந்து வருகிறார்கள்.

வரும் டிசம்பர் மாத இறுதியில் கிறிஸ் துமஸுக்கு முன்பாக இந்தப்படத்தை வெளியிடத் திட்டுமிட்டள்ளார்கள்.