Advertisment

அந்தக் கதை வேற, இந்தக் கதை வேற -டைரக்டர் விளக்கம்!

/idhalgal/cinikkuttu/story-different-story-different-director-description

"கார்த்தி படம், கதை வில்லங்கம்!' என்ற தலைப் பில் கடந்த "சினிக்கூத்து' இதழில் கவர் ஸ்டோரி எழுதியிருந்தோம். அதில் எஸ்.ஆர். பிரபு, எஸ்.ஆர். பிரகாஷ் பாபு ஆகியோரின் ட்ரீம் வாரியர்ஸ் கம்பெனி தயாரிப்பில், கார்த்தி- ராஷ்மிகா மந்தனா நடிக்கும் "சுல்தான்' படத்தின் கதை, கணேச மூர்த்தி என்கி

"கார்த்தி படம், கதை வில்லங்கம்!' என்ற தலைப் பில் கடந்த "சினிக்கூத்து' இதழில் கவர் ஸ்டோரி எழுதியிருந்தோம். அதில் எஸ்.ஆர். பிரபு, எஸ்.ஆர். பிரகாஷ் பாபு ஆகியோரின் ட்ரீம் வாரியர்ஸ் கம்பெனி தயாரிப்பில், கார்த்தி- ராஷ்மிகா மந்தனா நடிக்கும் "சுல்தான்' படத்தின் கதை, கணேச மூர்த்தி என்கிற இணை இயக்குநர் ஒருவரின் கதை என்றும், அந்தக் கதையைத்தான் டைரக்டர் பாக்யராஜ் கண்ணன், கார்த்தியை வைத்து ஒரு ஷெட்யூல் ஷூட்டிங் எடுத்திருப்பதாகவும் அந்த செய்தியில் எழுதியிருந்தோம்.

Advertisment

நமது இதழ் கடைகளுக்கு வந்ததுமே, படத்தின் டைரக்டர் பாக்யராஜ் கண்ணனை அழைத்து விசாரித்திருக்கி றார் தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு. ""அந்தக் கதை வேற... இந்தக் கதை வேற...'' என்று விளக்கம் சொன்ன பாக்யராஜ் கண்ணன், தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத் தலைவர் கே. பாக்யராஜிடமும் ""என்னோட கதை வேற'' என்ற விளக்கத்தையும் சொல்லியுள்ளார்.

Advertisment

kkk

""இல்லையே...! கணேசமூர்த்தி கதையில் இருக்கும் பல விஷயங்கள் உங்க கதையிலும் இருப்பதாக, ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு நேரில்போய் பார்த்ததையும் எங்களிடம் சொல்லியிருக்காரே'' என்று கே. பாக்யராக் கேட்டிருக்கி றார். இல்ல சார் அப்படியெல்லாம் எந்த விஷயங்களும் என்னோட கதையில் இல்லை...'' என்று சொல்லிவிட்டு வந்துள்ளாராம்.

மீண்டும் கணேசமூர்த்தியை அழைத்த கே. பாக்யராஜ், ""பொறுமையா இருங்க... படம் முடியட்டும்! ரிலீஸ் நேரத்துல பார்த்துக்கலாம்'' என்று ஆறுதல்கூறி அனுப்பி வைத்துள்ளாராம்.

இதற்கிடையே "சுல்தான்' படத்தின் இரண்டாது ஷெட்யூல் ஷூட்டிங்கிற்கு திண்டுக்கல்லில் செட்-ஒர்க் வேலைகள் நடக்கிறதாம்.

-பரமேஷ்

cine130819
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe