"வழக்கு எண் 18/9', "ஆதலால் காதல் செய்வீர்', "ஜன்னல் ஓரம்' என வரிசையாக முத்திரை பதித்த இயக்குநர்களுடன் பயணித்தவர் நடிகை மனீஷா யாதவ். சமீபத்தில் வெளியான "ஒரு குப்பை கதை' படத்தின்மூலமாக சினிமா ரசிகர்கள் மற்றும் பத்திரிகை யாளர்களின் பாராட்டுக்களை வாரிக் குவித்திருக்கிறார்.

Advertisment

manisha

நிதானமாகக் கதைகளைத் தேர்வுசெய்து நடிப்பது, ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்திற் காக முழுமையான அர்ப்பணிப்போடு உழைப்பது என அவசரப்படாமல் தமிழ் சினிமாவில் ஐந்தாண்டுகளை நிறைவு செய்திருக்கிறார் மனீஷா. இந்தப் பக்குவம் குறித்து அவர் கூறுகையில்,""பாலாஜி சக்திவேல், சுசீந்திரன், கரு. பழனியப்பன் என வரிசையாக முதல் மூன்று படங்களுமே முக்கியமான இயக்குநர்களுடையது.

அந்தவகையில் நிஜமாகவே நான் ரொம்ப லக்கினுதான் சொல்வேன். "வழக்கு எண்' நடிச்சிட்டிருக்கும்போதே எனக்கு "ஆதலால் காதல் செய்வீர்' வாய்ப்பு கிடைச்சது. அதேபோலதான் "ஜன்னல் ஓரம்' படமும். இந்த மூன்று படமுமே எனக்கு மொத்த சினிமாவையும் கத்துக் கொடுத்திடுச்சு. அங்கிருந்துதான் நான் "ஒரு குப்பைக் கதை' படத்தில் நடிப்பதற்கான அனுபவத்தைப் படித்துக்கொண்டேன்.

Advertisment

என் மனதுக்கு திருப்தி தராத கதைகளில் நடிக்க நான் விரும்புவதில்லை. படத்தில் வெறும் பொம்மையாக வந்து செல்லமுடியாது. என்னுடைய கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் இருக்கவேண்டும். நிறைய படங்களை என் பிடிவாதத்தால் இழந்துள்ளேன். கதையும் கதாபாத்திரமும்தான் எனக்கு முக்கியம்'' என்று அழுத்தம் திருத்தமாக அழகுத் தமிழில் கூறும் மனீஷா யாதவ், தற்போது தீவிரமாகக் கதைகள் கேட்டு வருகிறார்.

முன்னணி கதாநாயகன் ஒருவரது படத்தில் நடிப்பதற்கான இறுதிக்கட்ட பேச்சு வார்த்தையில் இருக்கும் அவர், விரைவில் அது குறித்த அறிவிப்பையும் வெளியிட இருக்கிறார்.