Advertisment

கார்ப்பரேட்டுகளின் களவாணித்தனம்!

/idhalgal/cinikkuttu/stereotype-corporates

லகிலேயே கொடுமையான திருட்டு ஒரு படைப்பாளியின் அறிவைத் திருடுவதுதான்! அறிவைத்திருடி கொள்ளை லாபம் பார்ப்பவர்கள் அந்த அறிவுக்குச் சொந்தமான படைப் பாளியைக் கடுகளவும் கண்டு கொள்வதில்லை. இப்படியான அறிவுத்திருட்டு, கதைத் திருட்டு என்ற பெயரில் தமிழ்சினிமாவில் நிறைய நடக்கிறது. அதை மையப் படுத்தி உருவாகியுள்ள படம் தான் "படைப்பாளன்.' எல்.எஸ்

லகிலேயே கொடுமையான திருட்டு ஒரு படைப்பாளியின் அறிவைத் திருடுவதுதான்! அறிவைத்திருடி கொள்ளை லாபம் பார்ப்பவர்கள் அந்த அறிவுக்குச் சொந்தமான படைப் பாளியைக் கடுகளவும் கண்டு கொள்வதில்லை. இப்படியான அறிவுத்திருட்டு, கதைத் திருட்டு என்ற பெயரில் தமிழ்சினிமாவில் நிறைய நடக்கிறது. அதை மையப் படுத்தி உருவாகியுள்ள படம் தான் "படைப்பாளன்.' எல்.எஸ். தியான் பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் எஸ். நடச்சத்திரம் செபஸ்தியான், பிரபுலீன் பாபு, ஆண்டனி ஆகியோர் இணைந்து இந்த படத்தைத் தயாரித்துள்ளனர்.

Advertisment

மனோபாலா, இயக்குநர் தருண்கோபி, ஜாக்குவார் தங்கம், பாடகர் வேல்முருகன், "காக்கா முட்டை' ரமேஷ் - விக்கி, அஷ்மிதா, வளவன், திருச்சி வேலுச்சாமி ஆகியோர் நடித்துள்ளனர்.

Advertisment

cc

ஒளிப்பதிவு- வேல்முருகன், இசை- கிருபாகரன், பாடல்கள்- கு. கார்த்திக், கலை- ஸ்ரீமன் பாலாஜி, எடிட்டிங்- எஸ்.பி. அகமது, மக்கள் தொடர்பு- மணவை புவன். கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இயக்கி, நாயகனாக நடித்துள்ளார் எல்.எஸ். பிரபு ராஜா இவர் இயக்குநர் தருண் கோபியிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர்.

""முழுக்க முழுக்க சினிமாவில் இயக்குநராகத் துடிக்கும் ஒரு உதவி இயக்குநரின் கதை இது.

முன்பெல்லாம் படத்தயாரிப் பாளர்கள் எளிமையான இடத்தி லிருந்து வந்தவர்களாக இருந் தார்கள். இப்போது பெரும் பாலான படங்களைத் தயாரிப்பது கார்ப்பரேட் நிறுவனங்கள் தான். கதை கேட்பது கிடையாது! "பவுண்டட் ஸ்கிரிப்ட் கொடுங் கள், படித்துவிட்டு சொல்கிறோம்' என்று கதை வாங்கி கிடப்பில் போட்டு ,அவர்களை அலைக் கழிக்கிறார்கள். பிறகு... சில நாட்க ளில்... ஒரு பிரபலமான இயக்குநர் வைத்து அந்தக் கதையைப் படமாக்கி வெளியிடுகிறார்கள்.

அந்த உதவி இயக்குநரின் உழைப்புக்கு மதிப்பு கொடுப்பதில்லை. அப்படி கார்ப்பரேட் நிறுவனம் ஒன்றிற்கு கதை சொல்லப்போகும் ஒரு உதவி இயக்குநரின் சொந்தக் கதை பற்றியும், அவன் சொன்ன கதைப்பற்றியும்தான் இந்த படம்'' என்கிறார் பிரபு ராஜா.

cine200819
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe