Advertisment

பூஜையுடன் ஸ்டார்ட்

/idhalgal/cinikkuttu/start-pooja

ஜி.ஆர்.மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் தயாரிக்கும் முதல் திரைப்படம் "நர்மதா.' நந்திதா ஸ்வேதா, விஜய் வசந்த், எம்.எஸ். பாஸ்கர், சந்தோஷ் பிரதாப், புதுமுகம் அருண் தீபக், மாஸ்டர் ரெனீஷ் மற்றும் பலர் நடிக்கிறார்கள். தாய்- மகன் பாசத்தைப்பற்றிப் பேசும் இந்த படத்தின் படப்பிடிப்பு நாகர்க

ஜி.ஆர்.மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் தயாரிக்கும் முதல் திரைப்படம் "நர்மதா.' நந்திதா ஸ்வேதா, விஜய் வசந்த், எம்.எஸ். பாஸ்கர், சந்தோஷ் பிரதாப், புதுமுகம் அருண் தீபக், மாஸ்டர் ரெனீஷ் மற்றும் பலர் நடிக்கிறார்கள். தாய்- மகன் பாசத்தைப்பற்றிப் பேசும் இந்த படத்தின் படப்பிடிப்பு நாகர்கோவிலில் பூஜையுடன் தொடங்கியது. சதீஸ் பி. சரண் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்தை, தேசிய விருது பெற்ற எடிட்டர் ராஜா முகமது படத்தைத் தொகுக்கிறார். கலை இயக்கத்தை ஜெய் காந்த் கவனிக்க, ஓம் பிரகாஷ் சண்டைக் காட்சிகளை அமைக்கிறார்.

Advertisment

start

திரைக்கதை எழுதி தயாரிப்பதுடன் இயக்குநராக அறிமுமாகிறார் கீதா ராஜ்புத்.

""தாய்க்கும் மகனுக்கும் உள்ள பாசப்பிணைப்பை நெகிழ்ச்சியான பயணத்தின் பின்னணியில் உணர்வுப்பூர்வமாகச் சொல்கிறேன். இதில் கதையின் நாயகியாக நடித்திருக்கும் நந்திதா ஸ்வேதா, ஏழு வயது ஆண் குழந்தைக்கு தாயாக நடிக்கிறார். கதையின் நாயகனாக நடிக்கும் விஜய் வசந்த் இதுவரை திரையில் பார்த்திராத புதிய கேரக்டரில் நடிக்கிறார். இந்தப் படத்தில் கௌரவ வேடத்தில் நடிக்க முன்னணி நடிகர் ஒருவருடன் பேச்சு வார்த்தை நடைபெற்றுவருகிறது'' என்கிறார் டைரக்டர் கீதா ராஜ்புத்.

Advertisment

இயக்குநர் கீதா ராஜ்புத், திருநங்கையைப் பற்றி ‘"என்னைத் தேடிய நான்', "காதலைப் பேசும் ‘மயக்கம்', காது கேளாத மற்றும் வாய் பேசாத ஒரு பையனை மையப்படுத்திய "கபாலி'’என மூன்று குறும்படங்களை தயாரித்து இயக்கி இதற்காக சிறந்த இயக்குநர் விருதையும் வென்றிருக்கிறார். பாலாவின் இயக்கத்தில் உருவான "தாரை தப்பட்டை'’ படத்தில் உதவியாளராகப் பணியாற்றியவர்.

ப்

Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe